;
Athirady Tamil News

வவுனியா பூம்புகார் கிரமத்து மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கிய “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.. (படங்கள் & வீடியோ)

0

வவுனியா பூம்புகார் கிரமத்து மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கிய மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. (படங்கள் & வீடியோ)

###################################
வவுனியா பிரதேசச் செயலக பிரிவில் உள்ள விவசாய தொழிலாளர் வாழும் கிராமம் பூம்புகார் கிராமமாகும். இங்கே வாழும் அநேகர் விவசாய கூலித் தொழிலாளர்களே. இந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு போதிய கற்றல் உபகரணங்கள் இல்லாதபடியால் பாடசாலை வரவுகள் குறைவாக இருப்பதாகவும் கல்வி உயர்ச்சி மட்டம் குறைவாக இருப்பதாகவும் அறியத் தருகின்றார்கள், அந்த வகையில் பூம்புகார் கிராமத்தில் வசிக்கும் சமூகஆர்வலர் திரு.ஹரிகரன் என்னும் முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் எமது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு நேரில் வந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கேட்டிருந்தார்.

அந்த வகையில் இன்றைய நாளில் பிறந்த நாளைக் காணும் நம் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த சொக்கர் நாகேஷ் பரம்பரையை சேர்ந்த லண்டனில் வசிக்கும் திரு.திருமதி. கண்ணன் ஆனந்தி தம்பதிகளின் ஏகபுதல்வி செல்வி.மதுரா அவர்களின் இன்றைய பிறந்ததினத்தை முன்னிட்டு அவரினால் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டது

அதேவேளை செல்வி மதுரா அவர்களது மூத்த மாமியான வசந்தா என அழைக்கப்படும் கனடாவில் வசிக்கும் திருமதி.ரவி பிரேமகுமாரி அவர்களின் பிறந்த நாளும் இன்றாகும். இன்றைய நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இவ்விருவர்களின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா பூம்புகார் கிராமத்தின் மாணவர்களுக்கு பாடசாலைக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் பூம்புகார் கிராமத்துக்கு சென்று சமூக ஆர்வலர் திரு.ஹரிகரன் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பூம்புகார் சித்தி விநாயகர் ஆலயத்தின் பரிபாலன சபையின் கௌரவ செயலாளர் திரு.சக்திவேல் லிங்கேஸ்வரன் அவர்களும் பொதுமக்களும் மாணவர்களுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கு சமூக ஆர்வலர் திரு.ஹரிகரன் மற்றும் ஆலய செயலாளர் திரு.லிங்கேஸ்வரன் ஆகியோருடன் மன்றத்தின் பிரதம ஆலோசகர் திரு.மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

அத்தோடு குறித்த கிராமத்தில் தனிமையில் வசிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர் குடும்பங்களுக்கும் உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை புளியங்குளத்திலிருந்து விபத்தொன்றில் படுகாயமடைந்த கணவரால் பாரிய தொழில் செய்ய இயலாத காரணத்தால் பிள்ளைகளுக்கு அன்றாட உணவுக்கே சிரமப்படும் நிலையில் வாழும் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” அலுவலகத்திற்கு வருகை தந்து தனது நிலையைக் கூறி “உலருணவுப் பொதியாவது தந்துதவுங்கள்” எனக் கோரி நின்றார். அவருக்கும் இவ்விருவர் பிறந்த நாள் நினைவாக உலருணவுப் பொதி வழங்கப்பட்டது.

மேற்படி “கற்றல் உபகரணங்களையும், உலருணவுப் பொருட்களையும்” பெற்றுக் கொண்டோரினாலும், கலந்து கொண்டோரினாலும் “செல்வி.மதுரா, திருமதி.வசந்தா” ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்தினையும், இதனை ஒழுங்குபடுத்தித் தந்த “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” நன்றியினையும் தெரிவித்தனர்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

28.02.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.