ஆத்ம திருப்திக்கான அன்பளிப்பு உதவி வழங்கியது.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. (படங்கள் & வீடியோ)
ஆத்ம திருப்திக்கான அன்பளிப்பு உதவி வழங்கியது.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###########################
புங்குடுதீவைச் சேர்ந்த கனடாவில் வசிக்கும் பிரபல வர்த்தகரின் மனைவிக்கு இன்றைய தினம் பிறந்த நாளாகும்..தமது குடும்பத்தின் சிறப்பான நாட்களில் தாயக சொந்தங்களுக்கு சமூகநல அறப்பணிகளை தொடர்ந்து செய்து வரும் இவர்கள், தமது பெயரையோ தம்மை அடையாளப்படுத்தும் எதனையும் பொதுவெளியில் சொல்ல விரும்புவதில்லை.. “எமது தாயக சொந்தங்களுக்கு இவ்வாறான உதவிகள் வழங்குவது ஒரு ஆத்ம திருப்திக்காகவே, எனவே இதில் எம்மை விளம்பரப்படுத்த எமக்கு விருப்பம் இல்லை” எனவும், “தம்மை பற்றி எதைனையும் கூறாது உதவி தேவைப்படும் உறவுகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உதவி செய்யும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவ்வரிய பணியை செய்ய விரும்புகிறோம்” எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
அந்த வகையில் பெயர் சொல்ல விரும்பாத பிரபல வர்த்தகரின் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச கைவேலி கிராமத்தில் தனிமையில் கவனிக்க யாருமின்றி வசிக்கும் வயோதிபத் தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இறுதிப்போரில் உறவுகளை இழந்த தாய், தன் பிள்ளைக்கு என்ன நடந்ததென இதுவரைத் தெரியாது வாழும் தாய், உறவுகளால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் வாழும் தாய், போரில் விழுப்புண்ணுடன் எதிர்காலத்தை எதிர் கொள்ள முடியாமல் தத்தளிக்கும் முன்னாள் போராளி என பலதரப்பட்ட நிலையில் வாழும் தாய்மார்களுக்கு.. பிறந்தநாள் கொடுப்பனவான உலருணவுப் பொதி அவர்கள் வாழும் கிராமத்திற்கு கொண்டு சென்று வழங்கப்பட்டது.
உலருணவுப் பொதி வழங்க ஒரு தாயார் வாழும் ஓலைக் குடிசைக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சேவையாளர்கள் சென்ற போது குடிசை ஒரே புகை மூட்டமாக காணப்பட்ட போது “என்னம்மா தேத்தண்ணி வைக்கப் போறீங்களோ?” என கேட்க, அந்த தாயோ.. “இல்லை தம்பி, தங்கச்சி ஆக்கள் சாப்பாட்டுச் சாமான் உங்களுக்கு தர வருவினம் என்டு சொன்னவ.. அதுதான் உலையை கொதிக்க வச்சன் அதுதான் புகையாக் கிடக்குது” என்றார்..
அப்போது தான் தெரிந்தது, காலையில் இருந்து சாப்பிட எதுவுமில்லாம் பட்டினியாய் இருந்த அந்த அம்மாவுக்கு இனி உணவாகப் போவது கனடாவில் பிறந்தநாளைக் கொண்டாடும், புகழ் விரும்பாத புண்ணியவதி அவர்களின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” மூலமாக வழங்கப்பட்ட உலருணவுப் பொதியே என்று.. அம்மாவின் நிலமை கண்களை கலங்க வைத்தது என்பது உண்மையே..
கொடிய யுத்தமும் அதனால் தொடரும் அவல வாழ்வும் யாருமில்லாத இவர்களைப் போல் வாழும் வயோதிபர்களை இப்படித்தான் வாட்டி வதைக்கிறது.. இந்நிலை மாற வேண்டுமெனில் இவர்களைப் போல் வாழும் தாய்மார்களை இனங்காண வேண்டும்.. வெறுமனே அலுவலகங்களை வைத்து சமூகப்பணி செய்யாமல், இவ்வாறான கிராமங்களில் சென்று உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களின் துயரை தீர்க்க வேண்டும்.
நிச்சயமாக காலத்தின் தேவைகருதி மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தொடர்ந்து பயணிக்கும்.இதனால் தான் அடுத்தவேளை உணவுக்கு அல்லல்படும் அன்னையர்களுக்கே தேடித் தேடி மாணிக்கதாசன் நற்பணி மன்றம் உதவி செய்கிறது. உதவி பெற்றவர்களின் வாழ்த்தும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வாழ்த்தும் இன்றைய பிறந்தநாளைக் கொண்டாடும் பெயர் சொல்லாத, பெருமை கொள்ளாத கருணையின் “நம் தாயக” உறவுக்கு “உதய”மான சிந்தனையால் வந்த செயல்வடிவமே இவ்வாறான உதவிகள், “ஈஸ்வர” புண்ணியத்தால் கிடைக்கப்படுகிறது.இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் கனடா உறவுக்கு இறைவன் என்றுமே துணை புரிவான்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
02.03.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1