;
Athirady Tamil News

பின்தங்கிய கிராமத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம் (படங்கள் & வீடியோ)

0

பின்தங்கிய கிராமத்து மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
################################

லண்டனில் வசிக்கும் ரோகினி என அழைக்கப்படும் திருமதி. விஜயகுமாரி பரமகுமரன் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுமுகமாக வவுனியாவில் பின்தங்கிய கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை தனது நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக வழங்கி வைத்தார்.

புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட அமரர் உயர்திரு சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் வழித்தோன்றல்களில் ஒருவரும் லண்டனில் வசிப்பவருமான ரோகினி என அழைக்கப்படும் திருமதி.விஜயகுமாரி பரமகுமரன் அவர்கள் தனது பிறந்தநாளான இன்று ஆடம்பர கொண்டாட்டங்களைத் தவிர்த்து, தாயகத்தில் வறிய குடும்பங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் கற்றல் வசதிக் குறைபாடுகளை இணங்கண்டு அவற்றைத் தீர்த்து வைக்குமுகமாக வவுனியா ஓமந்தை, நொச்சிமோட்டை, பன்றிக்கெய்தகுளம் போன்ற பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு தமது நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தார்.

மேற்படி இந்நிகழ்வில் பிரபல சமுக ஆர்வலர் டெனீஸ் என அழைக்கப்படும் திரு.டெனீஷ்வரன் அவர்கள் விசேட விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கான மாணவர்களை சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி. சர்மிளா அவர்கள் ஒழுங்குபடுத்தி தந்துள்ளார். அத்துடன் பன்றிக்கெய்தகுளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் அவர்களும் கலந்து கொண்டார்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

04.03.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.