;
Athirady Tamil News

கனடா வாழ் புங்குடுதீவு உறவுகளின் மகனின் பிறந்த நாளில், அன்னையர்களுக்கு ஆதரவு.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

0

கனடா வாழ் புங்குடுதீவு உறவுகளின் மகனின் பிறந்த நாளில் அன்னையர்களுக்கு ஆதரவு.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட கனடாவில் வசிக்கும் வர்த்தகரின் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தாயகப் பிரதேசங்களில் பல்வேறு சமுகப் பணிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக செய்து வருகின்றனர்.

தமது பெயரை குறிப்பிட விரும்பாத கனடா வாழ். உறவுகளான இவர்கள் கடந்த வாரத்தில் தமது மகளின் பிறந்தநாள் பரிசாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத் தலைவரின் மகளுக்கு துவிச்சக்கரவண்டியை வழங்கிய அதேநேரத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, வறுமையால் வாடும் பல குடும்ப தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். அதேபோல் வர்த்தகரின் துணைவியாரின் பிறந்த நாளில் தாய் நாட்டின் விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களின் தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகளும் வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைத்தனர்.

இன்று தமது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரத்தில் நோயுற்ற நிலையில் போசாக்கின்றி வாழும் தாய்மார், யாருமற்ற நிலையில் அவ்வப்போது கிடைக்கும் உணவை சாப்பிட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழும் தாய்மாருக்கும், தனித்து வாழும். பெற்றோர்களுக்குமான உலருணவுப் பொதிகளையும் அத்துடன் யுத்தத்தின் காரணமாக அதன் அடையாளமாக உடம்பெங்கும் புண்களால் அவஸ்தைப்படும் ஒருவர் தனது நிலையினை எம்மிடம் எடுத்துச் சொன்ன போது அவரின் உடல் நிலையை கருத்திற் கொண்டு உடனடியாக அவருக்கும் உலருணவுப் பொதி வழங்கப்பட்டது. இதனை மேற்படி வர்த்தகரின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது. தாய்மார்கள் வசிக்கும் வாழ்விடங்களுக்குச் சென்று இவ்வுதவிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்ட தாய்மார்கள் பெயர் தெரியாத.. சொல்லாத அந்த புண்ணியவானின் பிள்ளை சகல கலையும் பெற்று சந்நதி வாழ வேண்டும் என வாழ்த்தினார்கள். அத்தோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வாழ்த்துக்களையும் கனடா வாழ் பிறந்தநாள் கொண்டாடும் உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம். மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்” புகையிரத நிலைய வீதி, வவுனியா.
06.03.2021

You might also like

Leave A Reply

Your email address will not be published.