கனரா முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா, வெற்றிக் கிண்ணம் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. (படங்கள் வீடியோ)
கனரா முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா வெற்றிக் கிண்ணம் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.. (படங்கள் வீடியோ)
###########################
வவுனியாவில் கால்நூற்றாண்டைக் கடந்து பிரசித்தமாக இயங்கிக் கொண்டிருக்கும் முள்பள்ளியான கனரா முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு விழா மிக கோலாகலமான ஏற்பாடுகளுடன் வெகு விமரிசையாக நடந்தேறியது.
அருட் சகோதரி மாக்கிரட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வவுனியா தெற்கு முன்பள்ளி கல்விப் பணிப்பாளர் திருவாளர் வீரவாகு பரஞ்சோதி அவர்கள் பிரதம அதீதியாக கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக கவிஞரும் மாணிக்கதாசன் நன்பணி மன்றத்தின் செயலாளருமான மாணிக்கம் ஜெகன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவுக்கு இன்றைய நாளில் புங்குடுதீவை சேர்ந்தவரும், லண்டனில் வசிப்பவருமான சொக்கர் நாகேஷ் பரம்பரையை சேர்ந்த பாபு என அழைக்கப்படும் யோகலிங்கத்தின் மனைவியான திருமதி மீரா யோகலிங்கம் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கு அமைப்பில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.
இவ்விளையாட்டு போட்டிகள் தொடர்பாக பிரதீபன் ஆசிரியர்கள் அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி மீரா யோகலிங்கம் அவர்கள் தனது பிறந்தநாள் பரிசாக வெற்றி பெற்ற முன்பள்ளி குழந்தைகளுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
வெற்றிக் கிண்ணத்தை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளரும், கவிஞருமான மாணிக்கம் ஜெகன் அவர்கள் மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி மீரா யோகலிங்கம் அவர்களை முன்பள்ளி குழந்தைகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துகிறது..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
21.03.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1