லண்டன் பாபு மீரா தம்பதிகளின் திருமண நாளில் கணேசபுரத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
லண்டன் பாபு மீரா தம்பதிகளின் திருமண நாளில் கணேசபுரத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
###################################
புங்கையூர் வழித் தோன்றல்களான அமரர்கள் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் பரம்பரையில் வந்துதித்த லண்டனில் வசிக்கும் திரு.திருமதி பாபு மீரா தம்பதிகளின் திருமண மங்கல நாளை முன்னிட்டு வவுனியா மரக்காரம்பளை கணேசபுரத்தில் வாழும் கூலித் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
வயோதிப நிலையில் தனித்து வாழ்வோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்டு நகர திணைக்கள அலுவலங்களில் துப்பரவு தொழிலில் ஈடுபடுவோருக்கும் பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு கவனிப்பாரின்றி வாழும் வயோதிபர்களுக்கும் மேற்படி லண்டனில் வாழும் பாபு மீரா தம்பதிகளின் திருமண நாளில் அவர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மிகவும் வறிய நிலையில் வாழ்வோரைக் கொண்ட கிராமமாக கணேசபுரம் கிராமம் காணப்பட்டது. குறிப்பாக நீர்வளம் குன்றிய இடமாக காணப்படுவதால் விவசாய உற்பத்தி மிக குறைவாக காணப்பட்டது. இதனால் இந்தக் கிராமத்தில் தொழில் வாய்ப்பு மிக மிக குறைவாக இருப்பதால் நகரத்தை நோக்கி தொழிலாளர்கள் செல்லும் நிலையே காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் இருக்கும் குடுப்பங்களைத் தெரிவு செய்தே மேற்படி பாபு மீரா தம்பதிகளின் திருமண நாள் நினைவாக வறிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு விசேட உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
திரு.திருமதி பாபு மீரா தம்பதிகளை மரக்காரம்பளை கணேசபுரம் வாழ் மக்கள் சார்பாகவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் “பாபு மீரா தம்பதிகள் சீறும் சீறப்பும் பெற்று பல்லாண்டு காலம் நோய்நொடிகளின்றி சந்தோசமாய் வாழ” நாமும் வாழ்த்துகின்றோம்..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
06.04.2021