லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் நிர்வாகசபைத் தலைவரின் பிறந்தநாளும், கூமாங்குளம் மக்களும்.. (படங்கள்)
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் நிர்வாகசபைத் தலைவரின் பிறந்தநாளும், கூமாங்குளம் மக்களும்.. (படங்கள்)
###################################
புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கர் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபைத் தலைவரும், அறங்காவலரும், சமய, சமூகத் தொண்டருமான லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கூமாங்குளம் கிராமத்தில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்..
தற்போதைய நாட்டின் கொரோனா தொற்றுநோய் காரணமும், அதிகமான வரட்சி காலநிலையும் பாரிய சிக்கல் நிலையினை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக நாளாந்த கூலித் தொழிலாளர்களது நாளாந்த வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தி செய்ய பல பிரச்சினைகளை சந்திக்கின்றார்கள்.
இந்நிலையில் கூமாங்குளம் வட்டார பிரதேசசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும். தமிழ் விருட்சத்தின் உப செயலாளருமான சந்திரபத்மன் பாபு அவர்கள் மேற்படி கிராமத்தின் மிக வறிய நிலையிலுள்ளோர் தொடர்பாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” அறியத் தந்ததின் பிரகாரம், கண்ணன் ஐயா அவர்களது பிறந்தநாளில் குறிப்பிட்ட கிராமத்தின் மக்கள் தேவையை தீர்த்து வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கண்ணன் என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களது பிறந்தநாளில் கூமாங்குளம் வாழ் நாளாந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி உலருணவுப் பொதிகளை பேரருட் கொண்ட பயனாளிகள், தமது குடும்பத்தின் சார்பில், லண்டன் வாழ் திரு.கண்ணன் அவர்களுக்கும், இதனை ஏற்பாடு செய்து தந்த “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கு” தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், திரு.கண்ணன் ஐயா அவர்களுக்கு “பிறந்தநாள் வாழ்த்தினையும்” தெரிவித்துக் கொண்டனர். அவர்களுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தமது பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
08.04.2021