அமரர் இராசாத்தி அம்மா நினைவாக, தனிமைப்படுத்தப் பட்டோருக்கு உலருணவுப் பொதி வழங்கல்… (வீடியோ படங்கள்)
அமரர் இராசாத்தி அம்மா நினைவாக, தனிமைப்படுத்தப் பட்டோருக்கு உலருணவுப் பொதி வழங்கல்… (வீடியோ படங்கள்)
###################################
அச்சுவேலியைச் சேர்ந்த இராசாத்தி என அழைக்கப்பட்ட அமரர் தர்மலிங்கம் நாகேஸ்வரி அம்மா அவர்களின் நினைவாக சித்திராப் பௌர்ணமி விரதத்தினை முன்னிட்டு கொரோனா தொற்றுநோய் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுவிசில் வசிக்கும் பேர்ண் முருகன் ஆலய முக்கியஸ்தர்களில் ஒருவரும், சுவிஸ் தூண் “யாழ் ஏசியன் சுப்பர் மார்க்கட்” உரிமையாளருமான ராஜூ என அழைக்கப்படும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் மகளின் நிதிப்பங்களிப்பில், தனது அப்பம்மாவின் நினைவாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக பம்பைமடு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கற்பகபுரம் மேட்டுத்தெரு.புதிய கற்பகபுரம் சிவபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் திருகோணமலையிலிருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று நோய் பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உலருணவுப் பொதி வழங்க முடியுமா? என குறித்த கிராமத்தின் கிராமசேவகர் செல்வேந்திரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ அவ்களும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதேவேளை அச்சுவேலியைச் சேர்ந்த இராசாத்தி என அழைக்கப்படும் அமரர் தர்மலிங்கம் நாகேஸ்வரி அம்மா அவர்களின் நினைவாக சித்திராப் பௌர்ணமி விரத நாளை முன்னிட்டு அன்னாருடைய மகனும் சுவிசி்ல் வசிப்பவரும் பேர்ண் முருகன் ஆலய முக்கியஸ்தர்களில் ஒருவரும், யாழ் ஏசியன் சுப்பர் மார்க்கெட் உரிமையாளருமான ராஜூ என அழைக்கப்படும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா சிவபுரம் கிராமத்தி ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட சித்திராப் பௌர்ணமி விரதகாலப் பூசையும் ஆத்மசாந்தி அஞ்சலிப் பூசையும் நடைபெற மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஒழுங்குகளை மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பம்பைமடு கிராமத்தின் நாளாந்த கூலித் தொழிலாளர்கள் கொரோனா தொற்று நோய் சந்தேகத்தின் அடிப்படையில் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இவ்வாறான சுய தனிமைப்படுத்தப்பட்ட நாளாந்த கூலித்தொழிளாலர் குடும்பங்களுக்கு கிராமசேவையாளரின் வேண்டுகோளுக்கமைவாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தரின் அறிவுறுத்தலுக்கமைவாகவும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வட்டார பிரதேச சபை உறுப்பினர் திரு வீரவாகு விஜயகுமார் அவர்களின் வாகன ஒழுங்கமைப்புடனும் நேரடி வழிகாட்டலுடனும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
உலருணவுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும் இதுக்கான நிதிஉதவியளித்த ராஜூ என அழைக்கப்படும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் குடும்பத்துக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா.
26.04.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1