இடதுகாலினை இழந்த முதியவருக்கு, மருத்துவ போக்குவரத்து நிதியுதவி.. (படங்கள் வீடியோ)
இடதுகாலினை இழந்த முதியவருக்கு மருத்துவ போக்குவரத்து நிதியுதவி.. (படங்கள் வீடியோ)
சுனாமிக்கு மகன்மாரை பறிகொடுத்து.. பொதுப்பணியில் இடதுகாலினை இழந்த முதியவருக்கு மருத்துவ போக்குவரத்து நிதியுதவி வழங்கப்பட்டது.
##################################
வவுனியா பம்பைமடு புதிய கற்பகபுரத்தில் வாழும் சிங்கராசா சாமிநாதன் என்ற முதியவரின் மருத்துவ தேவைக்காக மாங்குளம் உயிரிழை நிறுவனத்திற்கு போய் வருவதற்கான நிதியினை இன்றைய நாளில் தனது பதினெட்டாவது பிறந்த நாளைக் கொண்டாடும் சித்திரவேல் கிஷாந்த் அவர்களின் பிறந்த நாள் பரிசாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ். சரவணையைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் வசிப்பவர்களும் புளொட் தோழருமான் பாபு என எல்லோராலும் அழைக்கப்படும் சித்திரவேல் ஹேமா தம்பதிகளின் ஏகபுத்திரன் கிஷாந்த் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா பம்பைமடு கிராமசேவையாளர் பிரிவில் புதிய கற்பகபுரத்தில் வசிக்கும் சாமி அப்பா என எல்லோராலும் அழைக்கப்படும் சிங்கராசா சாமிநாதன் என்பவரது இடது ஜெய்ப்பூர்கால் தற்போது பழுதடைந்து இருப்பதால் அதனை மாற்றம் செய்வதற்கு மாங்குளம் உயிரிழை அலுவலகத்திற்கு சென்று வருவதற்கான முச்சக்கர வண்டிக்கான செலவினை கிஷாந்த் அவர்கள் தனது பிறந்த நாள் பரிசாக மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தார்.
முன்னதாக தன்னை உழைத்து வாழ வைக்கும் இரு மக்களை சுனாமிக்கு பறிகொடுத்து இடம்பெயர்ந்து முகாம் வாழ்க்கை வாழ்ந்து புதிய கற்பகபுரத்தில் மீள்குடியேறி வாழ்ந்து வந்த நிலையில் பொது அமைப்புக்களில் ஆர்வத்தோடு இணைந்து, பொதுக் காரியங்களில் பங்கெடுத்து வந்த நிலையில் ஒரு ஒப்பந்த பணிக்காக பக்கோ எனும் இயந்திரத்தால் வீதி அகழிப்பு நடைபெற்ற போது தவறுதலாக சாமிநாதன் ஐயாவின் வலது காலின் மேல் மண் கொட்டியதால் ஏற்பட்ட பாரிய காயத்தினால் காலை இழக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு இன்று வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்குப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் போடப்பட்ட பிளாஸ்டிக் கால் பழுதடைந்து அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்திய போது அதனை இலவசமாக உயிரிழை அமைப்பு இலவசமாக செய்து கொடுக்க முன் வந்தாலும் உயிரிழை அமைப்பு இருக்கும் மாங்குளம் இடத்திற்கு அடிக்கடி போய் வருவதற்கான செலவை ஈடு செய்ய போதிய பொருளாதார நிலை அவருக்கில்லை..
இந்நேரத்தில் கடந்த வாரத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு சாமிநாதன் அவர்கள் நேரிடையாக வீடீயோ காணொளியில் உதவி கேட்டிருந்தார்.. அந்த வகையில் திரு.திருமதி சித்திரவேல் ஹேமா தம்பதிகளின் ஏகபுதல்வன் கிஷாந்த அவர்களின் பிறந்த நாளில் சாமிநாதன் ஐயாவின் மருத்துவ தேவைக்கான போக்குவரத்துக்கு தேவையான நிதியினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.
உதவியைப் பெற்றுக் கொண்ட சாமிநாதன் ஐயா கிஷாந்த் அவர்களை “நீடூழி காலம் வாழ்கவென” வாழ்த்தினார். அவரோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் கிஷாந்த் அவர்கள் “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க” என வாழ்த்துகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்…
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
01.05.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1