;
Athirady Tamil News

கணவரை இழந்த முன்னாள் போராளிக்கு, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கினார் சுவிஸ் மாதரூபி.. (படங்கள், வீடியோ)

0

கணவரை இழந்த முன்னாள் போராளிக்கு, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கினார் சுவிஸ் மாதரூபி.. (படங்கள், வீடியோ)
#############################

இறுதியுத்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர மீன்பிடிக் கிராமமான புதுமாத்தளன் பகுதியில் கணவரை இழந்து மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த பொருளாதார நெருக்கடி நிலையில் வாழும் முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு அவர்கள் விரும்பி கேட்டுக் கொண்ட வாழ்வாதார உதவியாக மரத்திலான பெரிய கோழிக் கூடு திருமதி ஜெகதீஸ்வரன் மாதரூபி அவர்களின் நிதிப்பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” வழங்கப்பட்டது.

கடந்த காலங்களில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக இலங்கையின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி முழுஇலங்கையிலும் பாதிக்கப்பட்ட உதவிகள் தேவையான மக்களுக்கு இன, மத, மொழி, சாதி, பிரதேசம், அரசியல் பேதம் பார்க்காது கற்றல் உதவி தொடக்கம் வாழ்வாதார உதவிகள் வரை வழங்கிய செயற்பாட்டைப் பொதுவெளியில் பகிரப்பட்டதை பார்த்து, எமது மன்றத்தின் பொருளாதார ஆலோசகரும் பிரதம அமைப்பாளருமான சுவிஸ் ரஞ்சன் அவர்களோடு தொடர்பு கொண்ட புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் வீராமலையைச் சேர்ந்த அமரர்.கனகசபை திருமதி மீனாம்பிகை தம்பதிகளின் மகளும், சுவிஸ் சொலத்தூணில் வசிப்பவருமான, “ரூபி அக்கா” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி.ஜெகதீஸ்வரன் மாதரூபி அவர்கள்..

கடந்தவாரம் நடைபெற்ற தனது பிறந்ததினத்தை முன்னிட்டு, “தன்னால் முடிந்த நிதியுதவியை வழங்குகிறேன், அதனைப் “பெண்களைக் கொண்ட வாழ்வாதாரம் தேவைப்படும் குடும்பத்துக்கு நல்லதொரு உதவியை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், ஏற்கனவே மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தில் தன் குடும்ப சூழ்நிலையை தெரிவித்து உதவி கோரியவர்களில் புதுமாத்தளன் கரையோரக் கிராமத்தில் வசிக்கும் கணவரை இழந்த நிலையில் மூன்று பிள்ளைகளோடு வாழும் கவிதா அவர்கள் தெரிவு செய்யப்பட்டு் வாழ்வாதார உதவியாக மரத்திலான பெரிய கோழிக்கூடு வழங்கப்பட்டது.

கணவரை இழந்த நிலையில் வயது வந்த பெண் பிள்ளைகளோடு கோழி வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் போதாமையால், கடற்கரை சென்று வலைதட்டியும், கருவாடு காயப் போடும் வேலை செய்தும் குடும்பத்தின் செலவினையும் பிள்ளைகளின் படிப்பு செலவினையும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் கொண்டு நடாத்தி வரும் இவர் தனது கோழிகளை அதிகமாக்கி வளர்க்கவும், அதனை பாதுகாத்து வைக்கவும் வசதியான கூடு ஒன்றைத் தரும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கோரியிருந்ததின் அடிப்படையில் இன்றைய நாளில், கடந்த வாரத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு “ரூபி அக்கா” என எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி ஜெகதீஸ்வரன் மாதரூபி அவர்களின் நிதி பங்களிப்பில், இன்றைய தினத்தில் புதுமாத்தளன் கிராமத்தில் கணவரை இழந்த முன்னாள் போராளியான கவிதா அவர்களின் வீட்டில் வைத்து, புதுமாத்தளன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சுரேஸ் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திருமதி கவிதா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

உதவியைப் பெற்றுக் கொண்ட கவிதா அவர்கள் இந்த உதவியை தந்துதவிய ரூபி அக்காவுக்கும், அவரது குடும்பத்துக்கும் இதனை ஒழுங்குபடுத்தித் தந்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்…

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

04.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.