அமரர் புஸ்பராணி அவர்களின் 5ஆம் ஆண்டு திவசத்தை முன்னிட்டு, முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் பொதிகள்.. (வீடியோ படங்கள்)
அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அவர்களின் 5ஆம் ஆண்டு திவசத்தை முன்னிட்டு முன்பள்ளி சிறார்களுக்கு, கற்றல் பொதிகளும் வழங்கப்பட்டது.
##################################
யாழ் நல்லூர்பதியை பிறப்பிடமாகவும் நாவற்குழி தச்சன்தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அவர்களின் ஐந்தாமாண்டு சிவப்பேறு திவச தினத்தில் அன்னாருடைய இளைய மகனும் சுவிஸ் தூணில் வசிப்பவருமான திரு சங்கர் சச்சிதானந்தன் அவர்கள் தனது குடும்பத்தின் சார்பாக வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வவுனியா சிவபுரம் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அம்மா அவர்களின் ஐந்தாமாண்டு திவசம் அனுஸ்டிக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டில் தூண் மாநிலத்தில் வசிக்கும் அன்னாரின் இளைய மகன் சங்கர் சச்சிதானந்தன் அவர்கள் தனது குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் பல்வேறு சமூகப்பணிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” முன்னெடுத்து அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அவர்களுடைய ஐந்தாமாண்டு திதி திவசநாளை தாயக உறவுகளோடு அனுஸ்டித்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் தாயகத்தில் வாழும் உதவிகள் தேவைப்படும் உறவுகளுக்கு ஆறுதல் தரும் பல்வேறு நடவடிக்கைகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கடந்த வருடங்களிலிருந்து முன்னெடுத்து வருவது தெரிந்ததே.
அந்தவகையில் அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அம்மா அவர்களின் ஐந்தாமாண்டு திவசம் தொடர்பாக அன்னாருடைய இளைய மகன் திரு சங்கர் சச்சிதானந்தன் அவர்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு” தொடர்பு கொண்ட ஒருசில மணித்தியாலங்களில் உடனடியாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய இசைப்பாளர்கள் துரித கதியில் செயற்பட்டு ஆச்சிபுரம் அன்னையர்களை ஒன்று கூட்டி விசேட உணவினை வழங்கியும்..
அத்தோடு மன்னார் வீதி சிவபுரம் முன்பள்ளி சிறார்களின் பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு முன்பள்ளி குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் பொதியினையும் வழங்கி அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அம்மா அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு திவசத்தை அன்னாரின் இளைய மகனார் விரும்பிக் கேட்டதன் படியே செய்து முடிக்கப்பட்டது..
தற்போதைய நாட்டுச் சூழலில், மிக சவாலான விசயமாக இருந்த போதிலும் திரு சங்கர் அவர்கள் சமூகத்தின்பால் கொண்ட அன்பும், கரிசனையும், ஆர்வத்தினையும் கௌரவிக்குமுகமாக இவ்வாறான சமூகப் பணியை குறுகிய நேரகாலத்தில் நேர்த்தியாக ஒழுங்கமைத்து திவச நாளில் நினைவு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சுவிஸ் நாட்டில் தூண் மாநிலத்தில் வசிக்கும். திரு சங்கர் சச்சிதானந்தன் அவர்கள் தனது தாயாரான அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அம்மா அவர்களின் ஐந்தாமாண்டு திவசத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் ஆச்சிபுர கிராமத்தில் வயோதிபத் தாய்மார்களுக்கு விசேட உணவு வழங்கப்பட்டதுடன் சிவபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டு அமரர் சச்சிதானந்தன் புஸ்பராணி அவர்களின் ஐந்தாமாண்டு திவசம் சமூகப் பணிகளோடு அணுஸ்டிக்கப்பட்டது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
13.05.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1