;
Athirady Tamil News

அச்சுவேலி அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

அச்சுவேலி அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

அச்சுவேலி அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டது..
###############################

அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் பதினைந்தாவது ஆண்டு நினைவு தினம் விசேட மதிய உணவு வழங்கி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது. விசேசமாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட கிராமத்தில் மக்கள் கலந்து கொண்டு அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவுநாளை நினைவு கூர்ந்தனர்.

பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் அமரர் மாதர் செல்லத்துரை அவர்களது திருவுருவ படத்திற்கு விளக்கேற்றி மலரஞ்சலி செய்யப்பட்டு ஆத்ம சாந்தி நிகழ்வு தொடங்கப்பட்டு அன்னாரின் நினைவுரையினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளரும் கவிஞருமான மாணிக்கம் ஜெகன் அவர்கள் நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் பதினைந்தாம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்தி நிகழ்வுக்கு வருகை தந்த மக்கள் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்து வணங்கினர். தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களது பதினைந்தாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவரால் அன்னாருக்கு அஞ்சலியுரையுடன் நன்றியும் கூறினார்

யாழ் அச்சுவேலியைச் சேர்ந்தவரும், சுவிஸ் தூணில் வசிப்பவரும் 1992ஆம் ஆண்டு முதல் சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய செயளாளர், பொருளாளர், என பல பொறுப்பு வகித்த முருகத் தொண்டனும், பிரபல வர்த்தகருமான திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் (ராஜு) அவர்களின் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வோடு மேலும் பல சமூகப்பணி உதவிகள் இன்றைய நாளில் நடைபெறவுள்ளது.. குறிப்பாக மன்னார் வீதி சிவபுரத்தில் உழைப்பாளர்கள் இல்லாத நிலையில் வாழும் தாயும், மகளும் கொண்ட குடும்பத்திற்கு கோழிக்கூடு மற்றும் கோழிகளும் வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வவுனியா வடக்கு பிரதேச புளியங்குளம் பரசங்குளத்தில் இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு சிறு கடைக்குரிய பொருட்களும் அன்னாரின் நினைவாக வழங்கப்படவுள்ளது..

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கலந்து கொண்ட மக்களோடு அன்னாரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது..

இவ்வாறான புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பானது தாயக சொந்தங்களுக்கு ஆறுதலாகவும் நிறைவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உறவுகளை ஒன்றிணைக்கும் சமூக ஒன்றுகூடலாகவும் எதிர்காலத்தில் சமூக ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமையும் என்பதில் நிறையவே நம்பிக்கை உண்டு.

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஆத்ம இறையடியில் ஈடேற்றம் காண எல்லாம்வல்ல இறைவனை மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வேண்டி வணங்குகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

26.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.