;
Athirady Tamil News

அச்சுவேலி மாதர் செல்லத்துரை நினைவாக, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

அச்சுவேலி மாதர் செல்லத்துரை நினைவாக, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு & கோழிகள்” வழங்கி வைக்கப்பட்டது.
################################

அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் பதினைந்தாவது ஞாபகார்த்த தினமான நேற்று பல்வேறு சமூகம்சார் உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக யாழ். அச்சுவேலியைச் சேர்ந்தவரும், சுவிஸ் தூணில் வசிப்பவருமான திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் (ராஜூ) அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் 26.05.2021 அன்று வாழ்வாதார உதவியாக வவுனியா சிவபுரத்தில் வசிக்கும் ஆனந்தராசா சரோஜினிதேவி என்பவருக்கு கோழிக்கூடு மற்றும் கோழிகள் வழங்கப்பட்டது.

கடந்த சிலதினங்களுக்கு முன்னர், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால்” கொரோனா தொற்று நோய் காரணமாக நாளாந்த தொழில் வாய்ப்பை இழந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட போது, குறித்த கிராமத்து கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி பரிமளம், செயலாளர் திருமதி வேஜினி ஆகியோர் கிராமத்தில் வாழும் விதவைத் தாயாருடன், கணவரால் கைவிடப்பட்ட மனைவியும் அதாவது அந்த ஏழைத் தாயின் மகளும், அவரது பிள்ளையும் வாழ்வதையும் அவர்களின் ஏழ்மை நிலையினையும், அவர்களின் தற்சார்பு பொருளாதார முயற்சியையும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” எடுத்துக் கூறியதுடன், குறித்த பயனாளியான ஆனந்தராஜா சறோஜினிதேவி அவர்களையும் அவரின் விதவைத் தாயாரையும் சந்திக்க வைத்தார்.

அதன் தொடர்ச்சியான நடவடிக்கை காரணமாக இன்றைய நாளில் அமரத்துவமடைந்த மண்ணைக் கிண்டி பொன் நிலமாக்கி, பொன் விளையும் பூமியாக விவசாய மன்னனாக வாழ்ந்து மறைந்த “மாதர் செல்லத்துரை” அவர்களின் பதினைந்தாமாண்டு நினைவு தினமான இன்றைய நாளில் அமரத்துவமடைந்த அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக யாழ். அச்சுவேலியைச் சேர்ந்தவரும், சுவிஸ் தூணில் வசிப்பவருமான திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் (ராஜூ) அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் கோழிகள் அடங்கலாக கோழிக்கூடு மற்றும் கோழிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்ட சூழ்நிலையில், கொரோனா தொற்றுநோய் அச்சம் காரணமாக வியாபார நிலையங்கள் பூட்டப்பட்ட போதும், இயற்கையின் சீற்றம் காரணமாக பலத்த காற்றும், பெருமழைக்கும் மத்தியிலும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வாழ்வாதார உதவி எந்தவிதமான தங்குதடையுமின்றி வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் சிவபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி, செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு உதவி வழங்கியவர்கள் தொடர்பான பெயர்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்து பயணாளிகளிடம் வாழ்வாதார உதவியை கையளித்தனர்.

தொடர்ந்து வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்டவர்களில் ஒருவரான விதவைத் தாயார் கண்ணீர் ததும்ப, அமரர் மாதர் செல்லத்துரை அவர்களை வணங்கி உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சங்கத்தின் செயலாளர் தங்களின் கோரிக்கைக்கு செவிமடுத்து அதனை உடனடியாகவே நிறைவேற்றிய “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” சிவபுரம் கிராம மக்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்தார். அத்துடன் நிதிப்பங்களிப்பு செய்த தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது சங்கத்தின் சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் கோடானுகோடி நன்றியினைத் தெரிவித்தார்.

நேற்றையதினம் வவுனியா கோயில் புளியங்குளம் மற்றும் சிவபுரம் கிராமத்தில் அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு அமரர். மாதர் செல்லத்துரை அவர்களின் பதினைந்தாமாண்டு நினைவாக விசேட மதிய உணவு வழங்கப்பட்டதுடன், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இன்றைய நாளில் அமரர் செல்லத்துரை அவர்களின் நினைவாக இன்று வழங்கப்படவிருந்த பரசங்குளம் கிராமத்தில் தனது இரு கால்களையும் இழந்த நிலையில் வாழும் முன்னாள் போராளி குடும்பத்திற்கான சிறு கடைக்கு உரிய பொருட்கள் பயணத்தடைகள் நீக்கப்படும் நாளில் அவர்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கப்படும் என்பதை கூறிக் கொள்வதோடு, அதற்கான பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளதையும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறாக அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் பதினைந்தாமாண்டு நினைவு நாள் பல்வேறு சமூகப்பணிகளுடன் நிறைவான மதிய உணவோடும் அன்னாரின் ஞாபகார்த்த நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

நிறைவாக இன்றைய நாளில் அமரத்துவமடைந்த “அமரர் மாதர் செல்லத்துரை” அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு எல்லாம்வல்ல இறைவனை மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வேண்டிக் கொள்வதோடு, நிதிப்பங்களிப்பு செய்த சுவிசில் வசிக்கும் தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.