;
Athirady Tamil News

அமரர் நடனசிவராசா நினைவாக, மகளின் நிதிப் பங்களிப்பில் கோழிகளும், கோழிக்கூடும் “M.F” ஊடாக வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

அமரர் நடனசிவராசா நினைவாக, மகளின் நிதிப் பங்களிப்பில் கோழிகளும், கோழிக்கூடும் “M.F” ஊடாக வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

“இறைபணிச் செம்மல்” அமரர் நடனசிவராசா நினைவாக, மகளின் நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவி வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###################################

வவுனியா நெளுக்குளம் கிராமத்தில் வசிக்கும் மாவீரர் குடும்பத்திற்கு சுவிஸ் வாழ் தயாளினி குணரெட்னம் அவர்களின் நிதியில் வாழ்வாதார உதவி வழங்கிது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். காலஞ்சென்ற “இறைபணிச் செம்மல்” சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் நான்காமாண்டு நினைவு தினமும், சிரார்த்த திவச தினத்தையும் முன்னிட்டு பல்வேறு சமூகப்பணிகளும் வாழ்வாதார உதவிகளும் வழங்கி அன்னாரின் நான்காமாண்டு திவச சிரார்த்த தினத்தை அன்னாரின் மகளான சுவிசில் வசிக்கும் திருமதி தயாளினி குணரட்ணம் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

மேற்படி “இறைபணிச் செம்மல்” அமரர்.சின்னத்துரை நடனசிவராசா அவர்கள், யாழ்.நீர்வேலியில் உள்ள ஆலயங்களில் பல திருப்பணிகளை செய்தவரும், நீர்வேலி அருள்மிகு செல்லக்கதிர்காம ஆலய தேர்த்திருவிழா உபயகாரரும், மேற்படி ஆலயத்துக்கென புதிய சித்திரத் தேர் திருப்பணியைச் செய்வித்து அன்பளிப்பு செய்தவரும், சப்த கன்னிகள் ஆலய முன்னைநாள் நிர்வாகத் தலைவரும், அவ் ஆலயத்திற்கென ஓர் அன்னதான மடமும் கட்டிக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்தும், மக்கள் மனதில் வாழ்வதுக்கு எடுத்துக் காட்டாக அவரது பிள்ளையும் அவரது திருப்பணி நற்காரியத்தில் ஈடுபடுவது மிகவும் எடுத்துக் காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிசில் வாழும் அமரர் நடனசிவராசா அவர்களின் மகளான திருமதி தயாளினி குணரட்ணம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் கிராம மக்களுக்கான விசேட மதிய உணவு திவச தினமன்று வழங்கப்பட்டதுடன்,

இன்றையதினம் இறுதி யுத்தத்தில் தனது கணவரையும் மூத்த மகளையும் ஒரே நாளில் செல் வீச்சுக்கு பலி கொடுத்து தற்போது இரண்டு பிள்ளைகளுடன் வீதிகளில் ஊதுபத்தி விற்பனை செய்து, அதில் வரும் சொற்ப வருமானத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் தாயொருவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளுடன் கோழிக்கூட்டினையும் வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க பயணத்தடை, வியாபார நிலையங்கள் இயங்க முடியாத நெருக்கடியான சூழ்நிலையிலும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஏற்றுக் கொண்ட பொறுப்பினை மிகக் கச்சிதமாக இன்றைய நாளில் செய்து முடித்துள்ளது.

இன்றைய வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் கௌரவ தலைவர் திரு தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) அவர்கள் கலந்து கொண்டு விளம்பரப் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் மாவீரரின் மனைவியிடம் கோழிக்கூட்டினையும் கோழிகளையும் வழங்கி வைத்தார்.

கோழிகளுடன் கோழிக்கூட்டினையும் பெற்றுக் கொண்ட அமரத்துவமடைந்த முன்னாள் போராளியின் மனைவியான பாபு நாகராணி குடும்பம் சார்பில் திருமதி பாபு அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததுடன், அமரத்துவமடைந்த அமரர் சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தித்தனர். அமரர் சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் ஆத்ம சாந்தி பெற மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் எல்லாம்வல்ல பரம்பொருளை பாதம் பணிந்து வணங்குவதோடு அமரர் இறைபணிச் செம்மல் சின்னத்துரை நடனசிவராசா அவர்களின் திவசநாள் நிறைவு பெற்றது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

07.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

இறைபணிச் செம்மல் அமரர் நடனசிவராசா அவர்களின் திவசநாளில் நிகழ்வு.. (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.