;
Athirady Tamil News

சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

0

சுவிஸ் கிரித்திகாவின் பிறந்தநாளில் கிராமங்களில் வாழும் ஏழைகளுக்கு உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)
###############################
சுவிஸ் பேர்ன் மாநிலத்தில் கோனிக்ஸ் பிரதேசத்தில் வசிக்கும் திரு.திருமதி.கேதீஸ்வரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி கிரித்திகாவின் பிறந்தநாள் நிகழ்வு தாயகத்தில் கிராமங்களில் வாழும் சிறுவர் சிறுமிகளால் மிகவும் கலகலப்பாக மகிழ்வோடு கேக் வெட்டி பிறந்தநாள் பாட்டுப் பாடி உண்டு மகிழ்ந்து கொண்டாடப்பட்டது. விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர் சிறுமிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு செல்வி கிரித்திகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.

செல்வி கிரித்திகாவின் பிறந்தநாள் நிகழ்வு கிரித்திகா விரும்பிக் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் பிறந்தநாள் நிகழ்வு பெரும் ஆடம்பரம் இல்லாமல், தனது பெற்றோர் எவ்வாறு சமூகப் பணிகள் செய்து மக்களோடு மக்களாக வாழ்ந்து ஏழை எளியோர் மீது அன்பு செலுத்தி மகிழ்ந்தார்களோ அவ்வாறே தனது பிறந்தநாளிலும் இடர்மிகு கொரோனா காலத்தில் மக்கள் படும் துன்ப துயரங்களை நீக்க என்ன உதவி செய்ய வேண்டுமோ அவ்வாறான உதவி வழங்கி கொண்டாட வேண்டும் என தெரிவித்ததின் பயனாக…

செல்வி கிரித்திகாவின் நிதிப்பங்களிப்பில் தனது பிறந்தநாளில் அவரது விருப்பத்தின்படியே கொரோனா தொற்று நோய் காரணமாக நாளாந்த வருமானத்தை இழந்து அடுத்தவேளை உணவுக்கு அல்லல்படும் குடும்பங்களுக்கு அதுவும் கிராமங்களில் இவ்வாறான குடும்பங்களை தேர்வு செய்து அக்குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை கேட்டுக் கொண்டதிற்கிணங்க இன்றைய நாளில் வவுனியா பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களை இனங்கண்டு அக்குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறிப்பாக விசேட தேவையுள்ளவர்களைக் கொண்ட குடும்பம், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், சத்திரசிகிச்சை செய்யப்பட்ட வயோதிபக் குடும்பங்கள், கொரோனா தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், தனித்து வாழ்வோர் குடும்பங்கள், கணவரால் கைவிடப்பட்டு குழந்தைகளோடு வாழும் தாய்மார்கள் என பலதரப்பட்ட வகையில் அன்றாட வருமானத்தை இழந்து பட்டினி நிலையில் வாழும் குடும்பங்களுக்கு செல்வி கிரித்திகாவின் பிறந்த நாளில் அவரின் நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

செல்வி கிரித்திகாவை தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் சகல கலையும் கற்று கல்வியில் சிறந்து கலைமகளாக செல்வத்தில் உயர்ந்து பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

18.06.2021


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.