சுவிஸ் கௌதம் பிறந்தநாள் சிறப்பு.. வாழ்வாதார உதவிகள், வாரி வழங்கினார்.. (படங்கள் வீடியோ)
சுவிஸ் கௌதம் பிறந்தநாள் சிறப்பு.. வாழ்வாதார உதவிகள், வாரி வழங்கினார்.. (படங்கள் வீடியோ)
################################
சுவிஸ் பேர்ண் பிரம்காடன் என்னுமிடத்தில் வசிக்கும் திரு.திருமதி குணரட்ணம் தயாளினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் கௌதம் அவர்கள் தனது பிறந்தநாளை கொரோனா தொற்று நோய் காரணமாக அன்றாட வருமானத்தை இழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளை வழங்கி கொண்டாடினார்..
செல்வன்.கௌதம் அவர்கள் தனது தந்தையாரின் சமூகப்பணிகளை சிறு வயதிலிருந்து மிக உன்னிப்பாக பார்த்து அதைப்பற்றி கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டவர். சுவிஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தாலும் தனது தாய் தந்தையாரின் பூர்வீகத்தையும், தாய் நாட்டையும் நேசிப்பதோடு தாயக உறவுகளை தனதுறவாக இணைப்பவர், இதுவே காலப்போக்கில் தனது தந்தையாரைப் போலவே தாயகத்தில் வாழும் தாயக உறவுகளுக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும் என விரும்புபவர்.
எனவே தனது பிறந்தநாளில் கொரோனா தொற்றுநோய் காரணமாக வருமானத்தை இழந்து வறிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி அவர்களை சந்தோசமாக வாழ்வதற்கு உதவி செய்யும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” கேட்டுக் கொண்டதிற்கிணங்க செல்வன்.கௌதம் பிறந்தநாளான இன்று வவுனியா கிராமங்களான கோயில்புதுக்குளம், மணிப்புரம், பம்பைமடு, பழைய கற்பகபுரம், மேட்டுத்தெரு, பாரதிபுரம் போன்ற கிராமங்களில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்டோர் குடும்பங்கள், கொரோனா தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், சிறுவர் மற்றும் வயோதிபர்கள் உள்ள குடும்பங்கள், பெண்தலைமைத்துவ குடும்பங்கள், விசேடமாக கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட மிகவும் வறிய குடும்பங்களுக்கு செல்வன்.கௌதம் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது பெற்றோர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக செல்வன்.கௌதம் அவர்களது பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர்கள் ஒன்று கூடி சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி ஆனந்தமாக கொண்டாடி கேக் உண்டு மகிழ்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கிராமங்கள் தோறும் மிகவும் வறிய நிலையில் வாழும் குடும்பங்களை அடையாளம் காட்டி உணவுப் பொதிகளை சுமந்து சில ஒழுங்கை வழியாக நடந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நற்பணியில் தம்மையும் இணைத்து, சமூகப்பணியில் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்த கிராமிய சமூக அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான திருமதி சிவரஞ்சனி, திருமதி வேஜினி, திருமதி பரிமளா ஆகியோருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறானவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்புமிக்க சேவையினால் எமது கொரோனா இடர்கால நிவாரணப்பணிகள் இலகுபடுத்தி நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதை இங்கே விசேசமாக குறிப்பிட வேண்டும்.
செல்வன்.குணரட்ணம் கௌதம் அவர்களது பிறந்தநாள் சமூகப்பணியின் போது, மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தோம் என்பதுடன் அவர்களின் பசியினை தீர்த்து வைத்துள்ளோம் என்பதே உயர்வான செயல் என “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” நம்புகிறது.
இன்றைய நாளில் பிறந்த நாள் காணும் செல்வன்.குணரட்ணம் கௌதம் அவர்களை தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “பல்கலையில் சிறந்து தேக ஆரோக்கியத்துடன் நீடித்த வாழ்வும் நிறைந்த செல்வமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென” வாழ்த்தி மகிழ்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
20.06.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1