சுவிஸ் ராஜுவின் நிதியில், அவயங்களை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி..! (படங்கள் & வீடியோ)
சுவிஸ் ராஜுவின் நிதியில், அவயங்களை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி..* (படங்கள் & வீடியோ)
சுவிஸ் ராஜுவின் நிதியில், அவயங்களை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி வழங்கியது.. மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
##############################
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள புளியங்குளம் லைக்கா குடியிருப்பு இந்தியன் வீட்டுத்திட்ட குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் போராளி குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அக்குடும்பத்தால் அமைக்கப்பட்ட சிறுகடைக்கான அரிசி, மா, சீனி, பருப்பு முதல் கொண்டு பல்வேறு பொருட்கள் வாழ்வாதார உதவியாக இன்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கப்பட்டது.
அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்கனவே பல்வேறு சமூகப் பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்நேரத்தில் புளியங்குளம் பரசங்குளம் லைக்கா குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் போராளி குடும்பம் கேட்டுக் கொண்ட சிறுகடைக்கு தேவையான உணவுப் பொருட்கள் கொரோனா தொற்று நோய் காரணமாக அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக குறித்த நினைவு தினத்தன்று வழங்க முடியாத காரணத்தினால் இன்று பயணத்தடை நீக்கப்பட்டவேளையில் உடனடியாக குறித்த குடும்பத்தினர் கேட்டுக் கொண்ட சிறு கடைக்குரிய வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ் தூணில் வசிப்பவரும் 1992 ஆம் ஆண்டு முதல் பேர்ண் முருகன் ஆலய செயளாளர், பொருளாளர், என பொறுப்பு வகித்த முருகத் தொண்டனும், பிரபல வர்த்தகருமான திரு. தர்மலிங்கம் சுபாஸ்கரன் (ராஜு) அவர்களின் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் மேற்படி அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக இவ்வாழ்வாதார உதவி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஏற்கனவே சில வாழ்வாதார உதவியும்.விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது .குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மன்னார் வீதி சிவபுரத்தில் உழைப்பாளர்கள் இல்லாத நிலையில் வாழும் தாயும் மகளும் கொண்ட குடும்பத்திற்கு கோழிக்கூடு மற்றும் கோழிகளும் முன்னதாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று வவுனியா வடக்கு பிரதேச புளியங்குளம் பரசங்குளத்தில் இரண்டு கால்களையும் இழந்த முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு சிறு கடைக்குரிய பொருட்களும் அன்னாரின் நினைவாக வழங்கப்பட்டது.
இவ்வாறு தாயக சொந்தங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகளை தொடந்து செய்து வருகின்ற யாழ் அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ் தூணில் வசிப்பவரும் பிரபல வர்த்தகருமான ராஜூ என எல்லோராலும் அழைக்கப்படும் திரு தர்மலிங்கம் சுபாஸ்கரன் அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.
அமரர் மாதர் செல்லத்துரை அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கலந்து கொண்ட மக்களோடு அன்னாரின் ஆத்ம ஈடேற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது..
இவ்வாறான புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பானது தாயக சொந்தங்களுக்கு ஆறுதலாகவும் நிறைவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உறவுகளை ஒன்றிணைக்கும் சமூக ஒன்றுகூடலாகவும் எதிர்காலத்தில் சமூக ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமையும் என்பதில் நிறையவே நம்பிக்கை உண்டு.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
22.06.2021
https://studio.youtube.com/video/aZcGfwhmIkc/edit
அச்சுவேலி மாதர் செல்லத்துரை நினைவாக, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
அச்சுவேலி அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1