;
Athirady Tamil News

பல்கலைக்கழக மாணவிக்கு, மாதாந்த உதவிப் பணம் வழங்கிய கனடா உறவுகள்..! (வீடியோ, படங்கள்)

0

பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கிய கனடா உறவுகள்..! (வீடியோ, படங்கள்)

கனடா உறவுகளின் நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவிக்கு மாதாந்த உதவிப் பணம் வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###################################
சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவிக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக பல்கலைக்கழக இறுதி ஆண்டுவரை கனடா வாழ் உறவான திருமதி கெங்காதேவி மற்றும் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பில் மாதாந்த உதவிப் பணம் வழங்க தீர்மானித்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

கனடாவில் வசிக்கும் திருமதி கெங்காதேவி அவர்களும் அவர்களின் பிள்ளைகளான செல்வி சி தர்மிக்கா திருமதி கு.கௌசிகா செல்வி சி.திவ்வியா மற்றும் கௌகாவின் செல்லமகளான வெண்ணிலா ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய இயலாத நிலையில் வாழும் குடும்பத் தலைவர் ஒருவரின் மகளான இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவியான வவுனியா கூமாங்குளம் கிராமத்தில் வசிக்கும் செல்வி தவராசா நிரோசா என்பவருக்கு கல்விக்கான மாதாந்த உதவிப் பணத்தினை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்குவதற்கு முன் வந்துள்ளார்கள். அந்தவகையில் இன்றையதினம் கல்விக்கான ஆரம்ப நிதியாக குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தினை பல்கலைக்கழக கல்விக்கான உதவித் தொகையென வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

வவுனியா விபுலானந்தாக் கல்லூரியின் மாணவியான இவர் 2017 ஆண்டு சப்ரகமுவா பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று வரும் சூழ்நிலையில் மாணவியின் தந்தைக்கு புற்று நோய் தாக்கம் ஏற்பட்டு வீட்டின் வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் உதவி கேட்டு எழுத்துமூலம் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் தான் ஏற்கனவே புதுக்குடியிருப்பு தேறாவில் கிராமத்தில் உடல்வலுவை இழந்த நிலையில் வாழும் முன்னாள் போராளிக் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளையும், கோழிக் கூட்டினையும் வழங்கி வைத்தவர்களே மீண்டும் குறித்த மாணவிக்கு தாம் உதவி செய்வதாக கனடா வாழ் திருமதி கெங்காதேவி அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பொறுப்பேற்று இன்றைய நாளில் ஆரம்ப நிதியாக ஒரு தொகை பண்த்தினை வழங்கி அம்மாணவியின் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கு உதவி வழங்கினர்.

இன்று குறித்த மாணவியின் இல்லத்திற்கு சென்று கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் பல்கலைக்கழக மாணவியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக கனடாவாழ் நன்கொடையாளர்களின் நிதிஉதவியினை வைபகரீதியாக வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

இந்திகழ்வில் தமிழ் விருட்சத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், உப செயலாளரும், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான திரு சந்திரபத்மன் பாபு அவர்களும் கலந்து மாணவிக்கான மாதாந்த உதவித்தொகை வழங்கும் நிகழ்வினை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்..

கல்விக்கான உதவியினைப் பெற்றுக் கொண்ட மாணவி கனடா வாழ் திருமதி கெங்காதேவி அவர்களுக்கும், செல்வி தர்மிக்கா, திருமதி கௌசிக்கா, செல்வி திவ்விக்கா, கௌசிக்காவின் மகளான வெண்ணிலா ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததோடு இதனை முன்னின்று பெற்றுத்தந்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார்..

அத்துடன் “இந்நிதியினால் தனது கல்விப் பெறுபேறு நிச்சயம் உயர்வடையும் எனவும், அவ்வாறு உயர்வடைந்து தனக்கு நல்ல தொழில் கிடைக்கும் பட்சத்தில் இன்று எனக்கு கிடைத்த இவ்வுதவி போன்று என்னைப் போல் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்குவேன்” என தெரித்து தனக்கு இவ்வுதவி கிடைக்க பாடுபட்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.

நிறைவாக எதிர்காலம் கல்வியே தமிழர்களின் மாற்றமடையா உயர்வு இந்த உயர்ந்த பணிக்கு உதவிய கனடாவாழ் திருமதி கெங்காதேவி மற்றும் அவர்களும் பிள்ளைகளான செல்வி தர்மிக்கா திருமதி கௌசிக்கா செல்வி திவ்விக்கா மற்றும் வெண்ணிலா ஆகியோருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும், உதவி பெற்ற மாணவியும், அவரது குடும்பத்தினரும், தாயக உறவுகளும் நன்றியை கூறிக் கொள்வதோடு, இதனை ஒழுங்குபடுத்தித் தந்த கனடா “நம் தாயகத்தின்” சமூக ஆர்வலர் திரு.ராஜா அவர்களுக்கும் விசேடமாக நன்றியினையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

28.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.