மட்டுநகர் “கனடா பிரின்சின்” நிதி உதவியில், “மாணிக்கமனை” வீடு, வவுனியா பிரதேச செயலாளரினால் வழங்கல்.. (படங்கள் & வீடியோ)
மட்டுநகர் “கனடா பிரின்சின்” நிதி உதவியில், “மாணிக்கமனை” வீடு, வவுனியா பிரதேச செயலாளரினால் வழங்கல்.. (படங்கள் & வீடியோ)
வவுனியா பிரதேச செயலாளரினால் கூமாங்குளத்தில் “மாணிக்க மனை” திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
#################################
வவுனியா கூமாங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் திரு திருமதி விஜயகுமார் விக்னேஸ்வரி குடும்பத்திற்கு “மாணிக்க மனை” என்னும் புதிதாக அமைக்கப்பட்ட இல்லத்தை வவுனியா பிரதேச செயலாளர் திரு நாகலிங்கம் கமலதாசன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து வழங்கினார்.
மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்தவரும், கனடா “நம் தாயகம்” குழுமத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான திரு.பிரின்ஸ் குணரட்ணம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழுமையான நிதிப்பங்களிப்பில் வவுனியா கூமாங்குளம் கிராமத்தில் இருதய நோயினால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவர் அடங்கலாக மகளுக்கும் நிம்மதியாக வாழ்வதற்கு உகந்த வகையில் “மாணிக்க மனை” எனும் புதிதாக அமைக்கப்பட்ட இல்லம் இன்று (09.07.2021) மதியம் பிரதேச செயலாளர் திரு நா.கமலதாசன் அவர்களால் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்யப்பட்டு திரு.திருமதி விஜயகுமார் விக்கினேஸ்வரி தம்பதிகளுக்கு கையளிக்கப்பட்டது.
ஏற்கனவே தமிழ் புத்தாண்டில் தொடங்கப்பட்ட இவ்வீட்டுக்கான பணி நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக சற்று காலதாமதமாகி இன்று உத்தியோகப்பூர்வமாக குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது. இவ்வீட்டுக்கான முற்றுமுழுதான நிதியினை கனடா நம் தாயகம் குழுமத்தின் தலைவர் திரு.பிரின்ஸ் குணரட்ணம் அவர்கள் தந்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் உத்தேசிக்கப்பட்ட நிதியானது பயணத்தடை காரணமாக திடீர் அதிகரிப்பு ஏற்பட்ட போதும். அதனை பொருட்படுத்தாது குறித்த வீட்டினை செம்மையாக முழுமையாக கட்டிக் கொடுக்கும் படி நிதி வழங்குனர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட “மாணிக்க மனை” இன்றைய நாளில் சுபநேரத்தில் பால் காச்சப்பட்டு பொங்கலிட்டு வருகை தந்தோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு இனிதாக புதுமனைத் திறப்புவிழா இனிதாக நிறைவேறியது.
புதுமனைத் திறப்பு விழாவில் வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபைத் தலைவர் தோழர் சு.ஜெகதீஸ்வரன் (சிவம்), வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைத் தலைவர் திரு த. யோகராசா (யோகன்) முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு.செந்தில்நாதன் மயூரன் அவர்களும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் குறித்த வட்டார உறுப்பினரும், தமிழ் விருட்சம் அமைப்பின் இயக்குனர் சபை உறுப்பினரும், இணைச் செயலாளருமான திரு.சந்திரபத்மன். பாபு ஆகியோரின் முன்னிலையில் வவுனியா பிரதேச செயலாளர் திரு நா. கமலதாசன் அவர்கள் வீட்டுக்கான பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து நாடாவினை வெட்டி உத்தியோகபூர்வமாக “மாணிக்க மனை”யினை கையளித்தார்.
குறிக்கப்பட்ட நேரகால இடைவெளியில் அழைக்கப்பட்டோர் அனைவரும் கலந்து கொண்டு அறப்பணியை கௌரவித்ததோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சமூகப்பணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேற்படி நிகழ்வில் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் திரு சந்திரபத்மன் பாபு இந்த வீட்டுக்கான குடும்பத்தின் கோரிக்கையினையும் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதனையும் மிகத் தெளிவாக குறிப்பிட்டு இவ்வாறான தொடர் சமூகப்பணியினை செய்யும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு பாராட்டினையும் தெரிவித்தார்..
முடிவாக புதிய வீட்டினைப் பெற்றுக் கொண்ட திருமதி விஜயகுமார் விக்கினேஸ்வரி அவர்கள் கண்ணீரோடு கைகூப்பி “நம் தாயகம் கனடா குணராஜா உதயராஜா அவர்களின் ஏற்பாட்டில், நம் தாயகம் தலைவர் பிரின்ஸ் குணரட்ணம் அவர்களால் கட்டித் தந்த வீடு இன்று எமக்கு கிடைத்துள்ளது.. நாங்கள் இப்படி ஒரு தரமான விசாலமான வீடு கிடைக்குமென நம்பவில்லை, கடவுள் போல உதவி செய்த எல்லோரையும் வணங்குகின்றேன்” என கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தளதளத்த குரலில் நன்றி கூறினார்.
மேற்படி “மாணிக்க மனை” வீட்டை கட்டி முடிக்க முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கிய மட்டக்களப்பு தன்னாமுனையை சேர்ந்தவரும், கனடாவில் வதியும் சமூக ஆர்வலருமான “கனடா நம் தாயகம்” உரிமையாளரான திரு.பிரின்ஸ் குணரட்ணம் அவர்களுக்கும், இதுக்கான ஏற்பாட்டை செய்து தந்த புங்குடுதீவை சேர்ந்தவரும் கனடாவில் வதியும் சமூகபற்றாளனும், மாணிக்கதாசன் நற்பணி மன்ற கனடா இணைப்பாளர்களில் ஒருவரும், “கனடா நம் தாயகம்” உரிமையாளர்களில் ஒருவரான திரு.குணராஜா உதயராஜா அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்து, மிகப் பெரிய திருப்தியோடும், நிறைவான மன நிம்மதியோடும் நாமும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” அலுவலகம் திரும்பினோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
09.07.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1