;
Athirady Tamil News

அமரர் குணராசா நினைவாக, “M.F” ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

0

அமரர் குணராசா நினைவாக, “M.F” ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)

அமரர் குணராசா நினைவாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
##############################

புங்குடுதீவில் பிறந்து, இலங்கை தலைநகர் கொழும்பில் வர்த்தகத்தில் தடம்பதித்து, கனடாவில் அமரத்துவமடைந்த அமரர் “குணம்” என அழைக்கப்படும் முத்தையா குணராசா அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தில், அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் குழந்தையுடன், தாயோடு வசிக்கும் சிதம்பரபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி விமல்ராஜ் பிரபாஜினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளும், கோழிக் கூடும் இன்றைய நாளில் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் வசிக்கும் திருமதி பிரபாஜினி விமல்ராஜ் கணவரால் கைவிடப்பட்டு நாளாந்த கூலிவேலை செய்து தனது தாயாரின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகின்றார். தந்தை காலமாகிய நிலையில் தாயாரும், நான்கு பிள்ளைகளும், தாயாரின் தாயாருமாக உழைக்கும் ஆண்கள் இல்லாத குடும்பமாக கூட்டுவாழ்வு வாழ்ந்து வருகின்றனர். தாயாரின் நாளாந்த கூலி வருமானத்தில் அரைகுறை உணவோடு வாழ்ந்து வருகிறோம் என எமக்கு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்களால் வளர்க்கப்படும் கோழிகளுக்கு கூடு தேவை என சமூக ஆர்வலர் திரு.சஞ்சீவன் அவர்கள் ஊடாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விண்ணப்பித்திருந்தார். அவர்களது கோரிக்கை சரிவர ஆராயப்பட்டு அமரர் முத்தையா குணராசா அவர்களது கால்நூற்றாண்டு நினைவாக குறிப்பிட்ட திருமதி பிரபாஜினி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளையும், கோழிக் கூட்டினையும் வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை அமரர் முத்தையா குணராசா குடும்பத்தினர் குறிப்பாக கனடாவில் வசிக்கும் “நம் தாயகம்” குழுமத்தின் உரிமையாளர்களின் ஒருவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கனடா கிளையின் இணைப்பாளர்களின் ஒருவருமான குணராசா உதயராஜா அவர்கள் கேட்டுக் கொண்டது மட்டுமல்ல அவரது தீவிர முயற்சியினால் இந்த வாழ்வாதார உதவி இன்று வழங்கப்பட்டது.

அமரர் முத்தையா குணராசா அவர்களது 25 ஆம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. செல்வநாயகம் சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்து கோழிகளையும் வழங்கி உத்தியோகபூர்வமாக திருமதி பிரபாஜினி விமல்ராஜ் குடும்பத்திற்கு கையளித்தார். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு.சஞ்சீவன் அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வுக்கு உதவி செய்தார்.

வாழ்வாதார உதவியினைப் பெற்றுக் கொண்ட திருமதி பிரபாஜினி நன்றி கூறுகையில்.. “இவ்வாறான உதவி இப்படி விரைவில் கிடைக்குமென நான் நினைக்கவில்லை. சஞ்சீவன் அண்ணன் மூலமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” கொரோனா காலத்தில் உலருணவுப் பொதி தருவதற்கு வந்திருந்த வேளையில் எனது நிலையினைச் சொல்லி வாழ்வாதார உதவி கேட்டிருந்தேன், நான் என் குழந்தையோடும், அம்மா சகோதரர்கள் உட்பட அம்மம்மாவும் ஒரேவீட்டில் தான் வசிக்கிறோம். மிகவும் கஸ்டப்படுகிறோம்.. எல்லோரும் வந்து உதவி செய்வதாக சொல்வார்கள், ஆனால் இதுவரை எந்தவிதமான உதவியும் எனக்கோ, எனது அம்மாவுக்கோ கிடைக்கவில்லை”.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திலிருந்து நேற்றே வந்து சொன்னார்கள் நாளைக்கு உங்களுக்கு உதவி வரும் என்று.. இன்டைக்கு நாங்கள் ஆறு பேர் தூக்க முடியாத பாரமான பெரிய கோழிக் கூட்டினை அமரர்  முத்தையா குணராசா அவர்களது 25 ஆவது ஆண்டு நினைவாக அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் எனது குடும்பத்திற்கு வழங்கியுள்ளார்கள். அவர்களை கை எடுத்து கும்புடுகிறேன்.. இன்டைக்கு நான் சந்தோசமாக இருக்கின்றேன்.. எனக்கு நம்பிக்கை வந்திருக்கிறது”..

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம் சொன்னதை செய்துள்ளார்கள். எங்களையும் மனிதராக நினைத்து, நாங்கள் சொன்னதை நம்பி இன்று நான் எதைக் கேட்டேனோ, அந்த உதவி தந்துள்ளார்கள். நன்றி.. ரொம்ப நன்றி உங்கள் அனைவருக்கும்” என்றார்.

அமரர் முத்தையா குணராசா குடும்பத்தினர் இவ்வாறு பல்வேறு உதவிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக தொடர்ந்து செய்து வருகின்றனர்.. இன்னும் சிலதினங்களில் மிகப் பெரிய கோழிக் கூடு வாழ்வாதார உதவியாக கணவரை இழந்த வளர்ந்த பெண் பிள்ளைகோடு வாழும் விதவை குடும்பத்திற்கு வழங்க உள்ளார்கள். குறிப்பாக குணராசா உதயராஜா அவர்களின் விடாப்பிடியான உதவிடும் குணமே இவ்வாறான சமூகப் பணிகளின் உச்சமான நடவடிக்கைகளாகும்..

இவ்வாறான உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள் அமரர் முத்தையா குணராசா அவர்களின் ஆத்மா சாந்திக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் குடும்பத்தினருடன் இணைந்து இறையருளை வேண்டிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

15.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.