அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்)
அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்)
பூமணி அவர்களின் 31 ஆம் புண்ணிய நாளில் வாழ்வாதார உதவிகள் மீண்டும் வழங்கல்…
###################################
புங்கையூர் மண்ணில் பிறந்து சுவிஸ் மாநகரில் மறைந்த புண்ணிய ஆத்மா பூமணி என அழைக்கப்பட்ட அமரர் மார்க்கண்டு புனிதவதி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக தாயக சொந்தங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் சுவிசில் அமரத்துவமடைந்த பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அன்னையின் முப்பத்தியோராம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வினை முன்னிட்டு சிதம்பரபுரம் கற்குளம் போன்ற கிராமத்தில் வசிக்கும் வயோதிபக் குடும்பங்கள் விசேட தேவைக்குட்பட்டோர் குடும்பங்கள், (பார்வைக் குறைபாடு) கர்ப்பிணித் தாய்மார்கள், பராமரிப்பின்றி வாழும் பொரியோர்கள் என பலதரப்பட்ட தேவைகளுடைய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் பூமணி என அழைக்கப்படும் திருமதி மார்க்கண்டு புனிதவதி அவர்களின் முப்பத்தியோராம் ஆத்ம சாந்தி நிகழ்வை முன்னிட்டு அன்னாரின் பிள்ளைகளான திரு திருமதி ஏகாம்பரநாதன் திலகவதி,.திரு சச்சிதானந்தன் குடும்பம், திரு சதானந்தன் குடும்பம், திரு தயானந்தன் ஆகிய குடும்பங்களின் நிதிப்பங்களிப்பில் சிதம்பரபுரம் மற்றும் கற்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் பல்வேறு தேவைகளுடைய பலதரப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
முன்னதாக இவ்வாறு உலருணவுப் பொதிகள் அன்னாரின் முப்பத்தியோராம் நாள் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டதன் தொடர்சியாகவே இன்றைய நாளிலும் வழங்கப்பட்டது, தொடர்ந்து வழங்கப்படவும் உள்ளது.
அதுமட்டுமன்றி அன்னாரின் நினைவாக வவுனியா செக்கட்டிப்புலவு கிராமத்தில் தந்தை இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டு தாய் காணாமல் போன தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளை பராமரித்து வரும் மாவீரரின் பெற்றோருக்கு வாழ்வாதார உதவியாக மிகப் பெரிய கோழிக் கூட்டுடன் கோழிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது..
இவ்வாறு தமது அன்னையின் நினைவாக பல்வேறு தானதருமங்களை தாயக உறவுகளுக்கு செய்து அன்னையின் முப்பத்தியோராம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வினை அன்னாரது பிள்ளைகளால் அனுஸ்டிக்கப்பட்டது.
தங்களது தாயாரின் நினைவு கூறலில் தாயகத்தில் வாழும் வறிய நிலையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி வழங்கியமைக்கு அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை ஆகியோருக்கும், இதுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து தந்த திரு.குழந்தை அவர்களுக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயக உறவுகளோடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அமரர் பூமணி அன்னையின் இறைசேர் வாழ்க்கையின் ஆத்ம சாந்திக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு இறைவனை வேண்டுக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
19.07.2021
அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் நினைவுகூரல்.. (படங்கள் வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1