மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய, அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்.. (படங்கள் வீடியோ)
மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய, அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்.. (படங்கள் வீடியோ)
படுகொலை செய்யப்பட்ட தந்தை, காணாமல் போன தாய்.. இவர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் மாவீரரின் பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகள்..
#################################
புங்குடுதீவில் பிறந்து சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்த பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு புனிதவதி அன்னையின் நினைவாக வவுனியா செக்கட்டிப்புலவு கிராமத்தில் வசிக்கும் மாவீரர் பெற்றோருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளோடு, கோழிக்கூடு அமரர் பூமணியின் பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா செக்கட்டிப்புலவு கிராமத்தில் மனையுடன் வசித்து வருபவர் திரு.பெருமாள் ஆறுமுகம். மனைவிக்கு நீரழிவு நோய் காரணமாக வலது கால் எடுக்கப்பட்டு நோயின் தாக்கத்தோடு வாழ்ந்து வருகிறார். இவர்கள் இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டவரின் ஐந்து பிள்ளைகளை பராமரித்து வருகின்ன்றனர்.
இந்த ஐந்து பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்ட பின் பிள்ளைகளின் தாயார் வெளிநாட்டுக்கு பணிப் பெண்ணாக பணி புரிந்து வந்த வேளையில் விடுமுறைக்காக ஊர் திரும்பியுள்ளார். அதன்பின் மீண்டும் வெளிநாடு போவதற்கான ஏற்பாட்டுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் போது காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் ஆதரவற்ற நிலையில் இருந்த ஐந்து பிள்ளைகளையும் வளர்த்து வருகின்ற திரு.பெருமாள் ஆறுமுகம் ஐயாவின் மகன் பாண்டியராஜன் என இயற் பெயரைக் கொண்ட இராகவன், பூநகரி தவளைப் பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையில் மாவீரரானார்.
இவ்வாறான மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவரும் பெருமாள் ஆறுமுகம் ஐயாவின் மனைவிக்கு நீரழிவு நோய் காரணமாக வலது கால் நீக்கம்பட்டுள்ளது. இந்த அம்மாவுக்கான மலசலகூடம் வசதி இல்லை.. இந்த அம்மாவின் வாழ்வியல் சூழல் மிகவும் பரிதாபத்துக்குரியது.. கவனிக்க வேண்டிய தேவையும் உள்ளது.
இவ்வாறான பல்வேறு வகையிலும் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமரர் பூமணி அன்னையின் நினைவாக அன்னாரது பிள்ளைகளான திரு.திருமதி ஏகாம்பரநாதன் திலகவதி குடும்பம், திரு.திருமதி.சச்சிதானந்தன் குடும்பம், திரு.திருமதி.சதானந்தன் குடும்பம், திரு திருமதி.தயானந்தன் குடும்பம் ஆகிய குடும்பங்களின் நிதிப் பங்களிப்பில் கோழிகளுடன் கோழிக்கூடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் கௌரவ தர்மலிங்கம் யோகராசா (யோகன்)அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிக்கான பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்து வைத்த அதேநேரம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு.வீரவாகு விஜயகுமார் அவர்கள் மாவீரரின் குடும்பத்திற்கு கோழிகளை வழங்கி ஏழைக் குடும்பத்தின் வாழ்வாதார உதவியினைக் கையளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் திருமதி பாக்கியராசா சிவதர்சினி அவர்களும், திரு பெருமாள் ஆறுமுகம் ஐயாவின் உறவினர்களும், ஊர் மக்களும் கலந்து கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வவுனியா தெற்கு பிரதேச சபையின் கௌரவத் தலைவர் தலைவர் தர்மலிங்கம் யோகராசா அவர்களை ஊர்மக்கள் தங்களின் பொதுவான குறைபாடுகளை தெரிவித்து கலந்துரையாடினர்.
முடிவாக திரு பெருமாள் ஆறுமுகம் ஐயா அவர்கள் உதவி செய்த அனைவருக்கும் குறிப்பாக அமரர் பூமணி அன்னையின் பிள்ளைகளான திரு திருமதி ஏகாம்பரநாதன் திலகவதி அவர்களுக்கும், திரு திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினருக்கும், திரு திருமதி. சதானந்தன் குடும்பத்தினருக்கும், திரு திருமதி. தயானந்தன் குடும்பத்தினருக்கும் கைகூப்பி வணங்கி தனது நன்றியினைத் தெரிவித்தார்.
திரு பெருமாள் ஆறுமுகம் ஐயாவுக்கு வழங்கிய வாழ்வாதார உதவியாக கோழிக் கூட்டினை ஊர்மக்கள் அதிசயமாக வந்து பார்த்த வண்ணமுள்ளனர்.. பலரின் கருத்தின்படி “இப்படிப் பெரிய கோழிக் கூட்டினை தாம் இப்போது தான் அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் வழங்கப்பட்ட இந்தக் கோழிக் கூட்டைத் தான் பார்த்ததாக” கூறுகின்றனர்.
இவ்வாறு தமது அன்னையின் நினைவாக பல்வேறு தானதருமங்களை தாயக உறவுகளுக்கு செய்து அன்னையின் முப்பத்தியோராம் நாள் ஆத்மசாந்தி நிகழ்வினை அன்னாரது பிள்ளைகளால் அனுஸ்டிக்கப்பட்டது.
தங்களது தாயாரின் நினைவு கூறலில் தாயகத்தில் வாழும் வறிய நிலையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி வழங்கியமைக்கு அவரது மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை ஆகியோருக்கும், இதுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து தந்த திரு.குழந்தை அவர்களுக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தாயக உறவுகளோடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அமரர் பூமணி அன்னையின் இறைசேர் வாழ்க்கையின் ஆத்ம சாந்திக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு இறைவனை வேண்டுக் கொள்கிறது.
ஒரு திருப்தியான பயனாளியைத் தெரிவு செய்து அவர்களின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவியை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வழங்கியுள்ளது என்ற மனத் திருப்தியுடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” அலுவலகம் நோக்கி பயணித்தோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
20.07.2021
அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் நினைவுகூரல்.. (படங்கள் வீடியோ)
அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1