;
Athirady Tamil News

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்தநாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)

0

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் ஒன்றுகூடிய சிறுவர் சிறுமியர்கள்.
############################
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் ஒமேகா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிப்பவர்களும் சூரிச் சபையில் மூப்பராக இறைபணி செய்பவருமான திரு திருமதி லோகராஜா ஸ்ரீ ரஞ்சினி தம்பதிகளின் ஏக புத்திரி செல்வி.ஒமேகா தனது பிறந்த நாளை தனது அண்ணாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். செல்வி ஒமேகா தனது பிறந்த நாளினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் வாழ் சிறுவர், சிறுமிகளோடு கேக் வெட்டி உலருணவுப் பொதிகள் வழங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

செல்வி.ஒமேகாவினதும் அவரது அண்ணனான செல்வன்.ஆரோன் அவர்களதும் பிறந்த நாள் நிகழ்வினை அவர்களது பெற்றோரின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுடன் வாழ்வாதார உதவி வழங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பான ஒழுங்கமைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய நாளில் திரு.திருமதி லோகராஜா ஸ்ரீரஞ்சனி மண இணையரின் ஏக புதல்வியான செல்வி ஒமேகா அவர்களது பிறந்த நாள் இன்று தாயகத்தில் வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் சிறுவர் சிறுமியர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு செல்வி ஒமேகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி பாட்டிசைத்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.

சிறுவர் சிறுமிகளுடன் பெற்றோர்களும் கலந்து கொண்ட ஒமேகாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

அதேவேளை பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு பிறந்த நாளை நிறைவு செய்யாமல் வாழ்வாதார நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையோர் வாயோதிபர்கள்.நாளாந்த வருமானத்தை இழந்து தனித்து வாழ்வோர் என பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்வோருக்கு ஒமேகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெற்றோர் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு வழங்கிய நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

செல்வி.ஒமேகா மற்றும் செல்வன்.ஆரோன் இருவரது பிறந்த நாளையும் ஒன்றாக ஒரே நாளில் கொண்டாடும் அதேவேளை எதிர்வரும் தினங்களில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மாவீரன் பண்டாரவன்னியன் கிராமத்தில் கணவர் இறுதி யுத்தத்தில் காணாமல் போன நிலையில் மகளுடன் வசித்து வரும் குடும்பத் தலைவிக்கு வாழ்வாதார கோழிக் கூடு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் செல்வி ஒமேகா மற்றும் ஆரோன் இருவர்களுடைய பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இன்றைய நாளில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி ஒமேகா அவர்களை “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.07.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.