பிரான்ஸ் அஞ்சனாவின் பிறந்த நாளன்று, கிளிநொச்சியில் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)
பிரான்ஸ் அஞ்சனாவின் பிறந்த நாளன்று, கிளிநொச்சியில் வாழ்வாதார உதவி.. (படங்கள் & வீடியோ)
############################
பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா மற்றும் ஜானவி ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வுகள் தாயகத்தில் கிராமங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்றைய நாளில் செல்வி அஞ்சனா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள்குளம், உதயநகர் மேற்கு, திருநகர் வடக்கு ஆகிய கிராமங்களில் வசிக்கும் விசேட தேவைக்குட்பட்டோர் குடும்பங்கள், கணவர் மற்றும் தந்தை இல்லாத குடும்பங்கள், தொழில் வாய்ப்பை இழந்த குடும்பங்கள் என பலதரப்பட்ட தேவைகள் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
தாயகத்தில் அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும் பிரான்ஸ் பாரீசில் வசிப்பவர்களுமான திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்லக் குழந்தைகளும், அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் தூண் மாநிலத்தில் வசிப்பவர்களுமான சமூகநேயன் ராஜூ என அழைக்கப்படும் திரு.திருமதி சுபாஸ்கரன் கேமேஸ்வரி தம்பதிகளின் பேரப்பிள்ளைகளுமான செல்வி.அஞ்சனா மற்றும் செல்வி.ஜானவி ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வுகள் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பில் தாயக மாவட்டங்களான முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பல தேவைகளுடைய குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
செல்வி அஞ்சனா அவர்களது பிறந்த நாள் சிறப்பாக உலருணவுப் பொதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் கலந்து கொண்ட கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கௌரவ சுயேட்சைக் குழு உறுப்பினர் திரு இராமையா மயில்வாகனம் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் உதவி தேவைப்படும் ஒவ்வொரு குடும்பங்களையும் இனங்காட்டி மிகவும் ஒத்துழைப்பு தந்தார். மக்கள் பிரதிநிதியின் சமூப்பணியினை செவ்வனே செய்த உதவியினை காணக் கூடியதாக இருந்தது.
கௌரவ உறுப்பினருடன் கிளிநொச்சி பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் செயலாளர் திருமதி.தனபாலசிங்கம் திருமகள் அவர்களும் உதயநகர் மேற்கு மா.கி.அ.ச. தலைவி திருமதி கணேஸ்குமார் கிறேஸ் அவர்களும் கலந்து கொண்டு பிறந்த நாள் சிறப்பினை மேலும் சிறப்பித்து மக்களுக்கு உலருணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர்.
இவ்வாறாக செல்வி அஞ்சனா அவர்களின் பிறந்த நாளினை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வெகு சிறப்பாக ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்தியது.
செல்வி அஞ்சனா அவர்களது பிறந்த நாளினை கேக் வெட்டி சிறுவர் சிறுமியர் ஏற்கனவே கொண்டாடி தமது மகிழ்ச்சியினைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சுவிஸ்வாழ் சமூகநேயன் சுபாஸ்கரன் அவர்களது பேரக் குழந்தைகளின் பிறந்த நாள் சிறப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
பிறந்த நாளினைக் கொண்டாடும் செல்வி அஞ்சனா அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக சொந்தங்களுடன் இணைந்து, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதுடன் வாழ்வாதார உதவிகள் வழங்கியமைக்கான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
28.07.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1