பிரான்ஸ் “யாமிலன், யாமினி, ஆதித்யா” ஆகியோரின் பிறந்தநாளில் இரண்டாம்கட்ட வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
பிரான்சைச் சேர்ந்த திரு திருமதி பாலநேசன் துவாரகா தம்பதிகளின் “யாமிலன் யாமினி ஆதித்யா” ஆகியோரின் பிறந்தநாளில் இரண்டாம்கட்ட வாழ்வாதார உதவிகளும்…
###################################
பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி. பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்லக் குழந்தைகளின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வவுனியா நொச்சிமோட்டை, பறநட்டாங்கள், மற்றும் பணிக்கர் புளியங்குளம் கிராமத்தில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய பொருளாதார வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்.அச்சுவேலியை சேர்ந்தவர்களும் பிரான்ஸ் பாரிசில் வசிப்பவர்களுமான பாலநேசன் துவாரகா தம்பதிகளின் “யாமிலன், யாமினி ஆகிய இரட்டையர்களின் 11 வது பிறந்தநாள், மற்றும் இளைய புதல்வன் ஆதித்தியாவின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டும்”, பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டமும் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவியான உலருணவுப் பொதிகளும் பயனாளிகளை மகிழ்சசியில் ஆழ்த்தியது.
திரு.திருமதி.பாலநேசன் துவாரகா தம்பதிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சேவையை கேள்வியுற்று தாமாகவே முன்வந்து “நலிவுற்றவர்களுக்கு உதவி செய்வது தார்மீகக் கடமையெனக் கூறி” இவ்வுதவியை திரு.திருமதி.பாலநேசன் துவாரகா தம்பதிகள் தமது நிதிப் பங்களிப்பில் வழங்கி இருந்தார்கள்.
முன்னதாக பிள்ளைகளின் பிறந்த நாளின் முன்னிரவில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு தொடர்பு கொண்டு “தங்களது குழந்தைகளின் பிறந்தநாள் நிகழ்வினை செய்ய முடியுமா?” எனக் கேட்ட போது உடனடியாக நிகழ்வை செய்வதற்கான நடவடிக்கையினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” முன்னெடுத்தது.
இருப்பினும் திரு.திருமதி பாலநேசன் துவாரகா தம்பதிகள், தங்களின் பிள்ளைகளின் பிறந்ததினத்துக்கு வழங்கிய பெரும் தொகையான உலருணவுப் பொதிகளில் குறித்த பிறந்த நாளன்று சிறு தொகையளவே வழங்கப்பட்டது. மிகுதி இரண்டாம் கட்டமாக இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஆதித்யா, யாமிலன், யாமினி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வானது, இன்றைய நாளில் சொச்சிக்குளம், பறநட்டங்கல், பனிக்கர் புளியங்குளம் என மிகவும் கஸ்ரப் பிரதேசங்களில் வாழும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் மேலதிகமாக இனிவரும் நாட்களில் மூவரின் பிறந்த நாள் கொடுப்பனவாக மிகவும் வறிஉய நிலையில் வாழும் குடும்பங்களை தேடி உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளில் சிதம்பரபுரம். கற்குளம், பறநட்டங்கல், பனிக்கர் புளியங்குளம் என மிகவும் கஸ்ரப் பிரதேசங்களில் வாழும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுலருணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கைகள் இக்குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
இவ்வாறான பல்வேறுபட்ட சமூகப்பங்களிப்புடன் “ஆதித்யா, யாமிலன் யாமினி” ஆகியோரின் பிறந்த நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு “அர்த்தமுள்ள அறப்பணிகளோடு கொண்டாடியும், கொண்டாட ஏற்பாடுகளை முன்னெடுத்தும் வருகிறது.
மேற்படி வாழ்வதார உதவிகளுக்கான நிதிப் பங்களிப்பை வழங்கிய இவர்களுக்கு பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” நன்றிகளைத் தெரிவிப்பதுடன், இன்றைய நாளில் இனிய பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.திருமதி. பாலநேசன் துவாரகா தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான “ஆதித்யா, யாமிலன், யாமினி” ஆகியோரை “பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீறும் சிறப்புடன் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயகத்து உறவுகளோடு இணைந்து வாழ்த்துகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
01.08.2021
பிரான்ஸ் “யாமிலன், யாமினி, ஆதித்யா” ஆகியோரின், பிறந்தநாள் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் &வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1