சுவிஸ் லுக்ஸ் அண்ணனின் பிறந்த நாளில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
சுவிஸ் லுக்ஸ் அண்ணனின் பிறந்த நாளில், “கல்விக்கு கரம் கொடுப்போம்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
###################################
புங்குடுதீவைச் சேர்ந்தவரும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிப்பவருமான திரு சின்னத்துரை இலக்ஸ்மணன் தனது பிறந்த நாளை தாயக உறவுகளோடு இனிதாக கொண்டாடினார்.
தாயக கிராமமொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் சிறுவர் சிறுமியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பிறந்தநாள் பாட்டிசைத்து கேக் வெட்டி தங்களது பிறந்த நாள் வாழ்த்தினை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.
திரு.லுக்ஸ் அண்ணன் என அழைக்கப்படும் திரு சின்னத்துரை இலக்ஸ்மணன் அவர்கள் தமிழர்களின் வாழ்வியலில் அக்கறையுடன் செயற்பட்டு தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றத்தை கல்வியால் மட்டுமே இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு பாடுபட்டவர்.. பாடுபட்டு வருபவர்.
அந்தவகையில் திரு லுக்ஸ் அண்ணனின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர் எல்லோருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
“லுக்ஸ்” என அன்புடன் அழைக்கப்படும் சின்னத்துரை இலக்ஸ்மணன் புங்குடுதீவில் பிறந்து சுவிஸில் வாழ்ந்த போதிலும் சமூகநலத் தொண்டில் தன்னார்வமுடன் செயற்படுபவர். குறிப்பாக தமிழ் கல்விச்சேவையின் முக்கிய செற்பாடடாளர்களில் ஒருவராகவும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் பொருளாளராகவும், மற்றும் பல்வேறு சமூக, மக்கள் நலத் தொண்டிலும், தன்னார்வமுடன் செயல்படுபவர்.
இதேவேளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயற்பாடுகளை சமூகவலைத் தளங்களில் பார்வையிட்ட இவரது குடும்பத்தினர், இவரது பிறந்தநாளை எமது மன்றத்தின் ஊடாக மக்களுக்கு வாழ்வாதார உதவியை செய்யுமாறு கூறி வழங்கிய நிதிப்பங்களிப்பில் இன்றையதினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி பரவலாக கிராமல்களி்ல் போடபட்டு வருவதால் கோழிக் கூடு அமைக்கும் கூடு அமைப்பது பணி சற்று காலதாமதமாகி உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் கோழிக் கூட்டுக்கான பணி நிறைவடைந்ததும் மிகவிரைவில் கோழிகளும், கோழிக்கூடும் வழங்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடிய லுக்ஸ் அண்ணர் அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய நிதிப்பங்களிப்புக்காக நன்றியினைத் தெரிவிப்பதோடு, தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
02.08.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1