லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு, கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.
###################################
புங்குடுதீவை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.சொ.ஆனந்தலிங்கம் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டம் வவுனியா புதிய கோயில்குளம் கிராமத்தில் தேக்குமரக் காட்டின் நடுவே இயற்கையான சூழலில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் சிறுவர்கள் ஒன்று கூடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான ஆனந்தன் என அழைக்கப்படும் லண்டனில் வதியும் திரு.ஆனந்தலிங்கம் அவர்களின் பிறந்ததினம் தாயகத்தில் மிக மகிழ்ச்சியாக பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.. பெருந்திரளாக சிறுவர்கள் கலந்து கொண்டு ஆனந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கிராமிய இணைப்பாளருமான திருமதி தாரணி பாக்கியராசா அவர்கள் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து சிறுவர்களுக்கும் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆனந்தன் அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
லண்டன் ஆனந்தன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் புதிய கோயில்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் முழுமையான பங்களிப்புடன் அந்த சங்கத்தின் செயலாளர், உப செயலாளர், பொருளாளரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய இணைப்பாளர், சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளர், உப செயலாளர் திருமதி பெரியண்ணன் பரிமளம்.ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்..
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பொதுமக்கள் ஆகியோரின் சில கோரிக்கைகள் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கையினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிறைவேற்றுக் குழுவின் அனுமதியுடன் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பெருந்திரளாக மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டமை நீண்ட நாட்களுக்கு பின் சந்தோசமாக இருந்தது. இதற்கு நிதிப்பங்களிப்பு செய்த லண்டன் ஆனந்தன் அவர்களது குடும்பத்திற்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் பிறந்தநாள் கொண்டாடும் திரு.ஆனந்தன் அவர்களை, தாயக உறவுகளோடு “தேக ஆரோக்கியமாக எந்நாளும் மகிழ்ச்சியாக சந்தோசமாக நீண்ட ஆயுலோடு இறைவன் ஆசியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
05.08.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1