வயோதிப நிலையில் வடைக்கடை நடாத்தும் அம்மாவுக்கு, கூரைத் தகரங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
வயோதிப நிலையில் வடைக் கடை நடாத்தும் அம்மாவுக்கு, கூரைத் தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
################################
தனது வயோதிப காலத்தில் மற்றவர்களுக்கு பாரமாக இருக்காமல் மாலை நேரங்களில் சிறு வியாபாரமாக வடைக் கடை நடாத்தி அதில் வரும் வருமானத்தில் சிறுகச் சிறுக கடையினை ஓரளவு திருத்தி வாழும் வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வடைக்கடை நடாத்தி வரும் அம்மாவான உக்கம்மா என எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி சுப்பிரமணியம் முத்துலட்சுமி அம்மாவுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் சுவிஸ்வாழ் தமிழுறவான திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்கள் தமது தந்தையாரான அமரர் மாதர் செல்லத்துரை ஞாபகார்த்தமாக “ஆடி அமாவாசை பிதிர்க் கடன் தீர்க்கும் விரத நாளினை முன்னிட்டு” உக்கம்மா கேட்டுக் கொண்டதற்கமைய பழுதடைந்த வடைக் கடையின் கூரைத் தகரங்களை மாற்றிக் கொள்ள வசதிக்காக புதிய கூரைத் தகரங்கள் இன்றைய நாளில் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக கற்குளம் 3 இன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு.குமணன் குறிப்பிட்ட கிராமத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது வடைக்கடை அம்மாவின் தேவையை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு பகிர்ந்து கொண்டதுடன் அந்த வடைக் கடையினையும் காட்டினார்.
மேற்படி உதவி தொடர்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பிரதம அமைப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அச்சுவேலியைச் சேர்ந்தவர்களும் சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வசிப்பவர்களுமான திருமதி கேமேஸ்வரி சுபாஷ்கரன் (ராஜு) அவர்கள் தனது தந்தையாரின் நினைவாக ஆடிஅமாவாசை விரத நாளினை முன்னிட்டு வடைக் கடையினை நடாத்தும் திருமதி உக்கம்மா என அழைக்கப்படும் சுப்பிரமணியம் முத்துலட்சுமி.என்பவருக்கு கடைக்குறிய தகரங்கள் சிதம்பரபுரம் காட்டு விநாயகர் ஆலயத் தலைவரும், கடன்காரன் திரைப்பட இயக்குநருமான திரு சிவகாந்தன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இயக்குனர் சிவகாந்தன் வாழ்வாதார உதவியை அம்மாவுக்கு வழங்கி வைத்ததுடன் நிகழ்வுக்கு வருகை தந்த 80 வயதிலும் தையல் தொழில் செய்து வரும் வயோதிப தாயொருவருக்கு தனது பிறந்த நாள் சந்தோசத்தினை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தினை வழங்கி வைத்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் உப தலைவர் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுக்கான ஒழுங்கமைப்புக்களை மேற்கொண்டார்.
முடிவாக தனது கடைக்குள் எம்மை அழைத்து வடை மற்றும் மரவள்ளிப் பொரியல் தந்து விருந்தோம்பல் செய்தார்.. அதேநேரம் “தனக்கு இந்த உதவியை அவரது தந்தையார் மாதர் செல்லத்துரை அவர்கள் நினைவாக கூரைத் தகரங்களை வழங்கிய சுவிஸ் வாழ் திருமதி.கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்களுக்கு நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்தார்..
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தோடு நற்பணிகளை சளைக்காமல் செய்துவரும் சுவிஸ்வாழ் திரு.திருமதி சுபாஷ்கரன் (ராஜு) கேமேஸ்வரி தம்பதிகளை வாழ்த்துவதோடு, ஆடி அமாவாசை விரத நாளினை முன்னிட்டு சிறு கடைக்குறிய தகரங்கள் வழங்கியமைக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் திருமதி கேமேஸ்வரி அவர்கள் கற்குளத்தில் இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்த நிலையில் முன்னாள் போராளியான கணவரோடு வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு வீட்டுக்கான கூரைத் தகரங்களையும் வழங்கி வைக்கப்பட நிதிப்பங்களிப்பு செய்திருக்கின்றார்.என்பது விசேடமாக குறிப்பிடத்தக்கது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
08.08.2021
அச்சுவேலி மாதர் செல்லத்துரை நினைவாக, வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடு” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
சுவிஸ் ராஜுவின் நிதியில், அவயங்களை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி..! (படங்கள் & வீடியோ)
அச்சுவேலி அமரர் மாதர் செல்லத்துரை நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1