;
Athirady Tamil News

கற்றல் உபகரணங்களுடன், ஆனந்தமாக கொண்டாடப்பட்டது “ஜெர்மனி அபிசா” அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

கற்றல் உபகரணங்களுடன், ஆனந்தமாக கொண்டாடப்பட்டது “ஜெர்மனி அபிசா” அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
##################################
ஜேர்மனியில் வசிக்கும் செல்வி அபிசா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். இவரை அப்பா, அம்மா, அக்கா, தங்கை, உறவினர், நண்பர்பர்களோடு தாயக சொந்தங்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் சகல சௌபாக்கியங்களுடன் வாழ வாழ்துகின்றார்கள்.

யாழ் சுண்டிக்குழி மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும் ஜேர்மன் வூப்பெட்டால் நகரத்தில் வசிப்பவர்களுமான திரு திருமதி. கணேசானந்தன் சுகிப்பிரியா தம்பதிகளின் புதல்வி அபிசா தனது அக்கா மிதுசா, தங்கை ஹரிணி ஆகியோருடன் இணைந்து பிறந்தநாளை தாயக உறவுகளோடும், சிறுவர் சிறுமியர்களோடும் இன்றைய நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா கிராமமொன்றில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இனிய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.

சிறப்பாக ஒழுங்குபடுத்துத்தப்பட்ட அபிசாவின் பிறந்தநாள் நிகழ்வுக்கு இரண்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளோடு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உப.தலைவர் திருமதி வினோதினி விதுசன், செயலாளர் திருமதி புனிதமலர் பாக்கியராசா, நிர்வாக சபை உறுப்பினர் திருமதி இராஜலட்சுமி நாகராஜா மற்றும் சமுர்த்தி சமுதாயக் கட்டமைப்பின் தலைவி திருமதி தேவராணி இரவிச்சந்நிரன் ஆகியோர் கலந்து அபிசா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வினை சிறப்பித்தனர்.

இதேவேளை அபிசாவின் பெற்றோர்கள், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சமூகப்பணியினை சமூக வலைத்தளங்களில் பார்வையிட்டு சமூகப் பணிக்கென ஒரு சிறிய தொகை பணத்தினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பிரதம அமைப்பாளரிடம் கையளித்து தாயக உறவுகளின் தேவைகளை தீர்த்து வைக்கும் செயற்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் என கூறிய போது, “வெறுமனே நன்கொடை என இல்லாது குறித்த பணம், குடும்பத்தில் ஏதாவது விசேட நிகழ்வு தொடர்பாக நிதிப்பங்களிப்பாக ஏதாவுது ஒரு நிகழ்வு செய்வதாக பயன்படட்டும்” என்பது பற்றி கலந்துரையாடிய போது இன்றையதினம் 17.08.2021 அன்று அவர்களின் புதல்விகளில் ஒருவரான செல்வி அபிசா அவர்களுக்கு பிறந்த நாள் வருகிறது என்ற இனிமையான தகவல் கிடைத்தது.

எனவே செல்வி அபிசா அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அபிசாவின் பிறந்தநாள் கொண்டாட்டமும், மாணவ மாணவிகளுக்கான கற்றலுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களையும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஒழுங்குபடுத்தி நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் இன்றைய நாளில் வவுனியா கிராமமொன்றில் சிறப்பான ஒழுங்கமைப்பில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட செல்வி அபிசா கணேசானந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வில் கிராமத்தின் சிறுவர் சிறுமியர்கள் மகிழ்ச்சியோடு ஒன்றுகூடி பிறந்தநாள் பாட்டுப்பாடி கேக் வெட்டி அபிசாவுக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்தனர்.. அத்தோடு பிறந்த நாள் நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

தொடர்ந்து செல்வி அபிசா அவர்கள் தனது அக்க மிதுசா, தங்கை ஹரிணி ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்வுக்கு வந்து கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தங்களது மகளின் பிறந்த நாளினை முன்னிட்டு திரு.திருமதி கணேசானந்தன் சுகிப்பிரியா தம்பதிகளால் வழங்கப்பட்ட நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. கற்றல் உபகரணங்கள நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உப.தலைவர், செயலாளர். உறுப்பினர் மற்றும் சமுர்த்தி சமுதாய கட்டமைப்பு தலைவி ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி வைத்தனர்.

கற்றல் உபகரணங்கள பெற்றுக் கொண்ட மாணவ மாணவிகள் சார்பாக ஒரு மாணவி செல்வி அபிசா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்து கற்றல் உபகரணங்கள் தந்தமைக்கு நன்றியினையும் தெரிவித்தார்.

நிறைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொரோனா காலத்தில் இக்கட்டான சூழ்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் மாணவ மாணவியர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய திருப்தியில், இன்றைய நாளில் இனிதான பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வி அபிசா அவர்களுக்கு சந்தோசமான பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவிக்கும் அதேவேளை இம்பாரிய நற்பணியினை செய்த ஜேர்மனி வாழ் தமிழுறவான திரு.திருமதி கணேசானந்தன் சுகிப்பிரியா தம்பதிகளுக்கு மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தாயக சொந்தங்களுடன் இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

17.08.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.