அமரர் அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் நினைவாக, உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ படங்கள்)
அமரர் அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் நினைவாக, உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.. (வீடியோ படங்கள்)
##############################₹####
புங்கையூரின் பூர்வீகத்தைக் கொண்ட வழித்தொன்றல்களின் உறவும் இலங்கைத் தலைநகரில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து இறைபதமடைந்த செல்வி அம்பிகா செல்லத்தம்பி அவர்கள் இறைபதமடைந்து முப்பத்தோராம் நாள் நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் நினைவாக, அன்னாரின் பூர்வீக உறவான புங்கையூரின் பரம்பரையைச் சேர்ந்த லண்டனில் அமரத்துவமடைந்த சொக்கர் நாகேஷ் தம்பதிகளின் சார்பாக, அவர்தம் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மீள்குடியேற்றக் கிராமமான புளியாலங்குளம் கிராமத்தின் பின்பக்கமாகவுள்ள பயரிக்குளம் என அழைக்கப்படும் கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் வாழும் குடும்பங்களுக்கு அமரர் அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் அமரத்துவமடைந்த மாத நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செட்டிக்குளம் பிரதேச இணைப்பாளர் திருமதி நிஷா அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், வவுனியாவிலிருந்து கலந்து கொண்ட சிவபுரம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி வேஜினி அவர்கள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தினார்.
வயல் காணிகளுக்கு மேற்பகுதியில் காணப்படும் இக்கிராமமானது அபிவிருத்தியில் கண்டு கொள்ளப்படாத கிராமமாகவே காணப்படுகிறது. பதினைந்து குடும்பங்கள் வசித்துவரும் நிலையில் தங்களுக்கு மலசலகூட வசதி இல்லை என குடியிருக்கும் மக்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான மிகவும் பின்தங்கிய கிராமங்களை தெரிவு செய்து அங்கே வசிக்கின்ற குடும்பங்களின் உடனடித் தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கான பரிகாரங்களை நிவர்த்தி செய்வதையே தனது தாரக மந்திரமாக கொண்டு செயற்படுகிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
அந்தவகையில் இன்றைய நாளில் அமரர் அம்பிகாவதி செல்லத்தம்பி அவர்களது நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் “புங்குடுதீவு அமரர்கள் சொக்கர் நாகேஷ் குடும்பத்தின்” நிதிப் பங்களிப்பில், உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அம்மக்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டது..
உலருணவுப் பொதிகளை பெற்றுக் கொண்ட மக்கள் தமது நன்றிகளை வணங்கி தெரிவித்துக் கொண்டனர்.. அத்தோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும், தாயக உறவுகளுடன் இணைந்து அமரர் அம்பிகா செல்லத்தம்பி அவர்களின் ஆத்ம சாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
26.08.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1