;
Athirady Tamil News

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்)

0

கனடா சரவணபவான் தம்பதிகளின் பொன்விழா திருமண நாளில், சமூகநேயப் பணிகள்.. (படங்கள்)
################################
புங்கையூர் சொந்தங்களான, புலம்பெயர்ந்து கனடாவில் வாழுகின்ற திரு திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் இல்லற வாழ்வின் இனிய பொன்விழா ஆண்டு நிறைவு நாள் அன்று (02.09.2021) மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது.

கனடாவில் வசிக்கும் புங்குடுதீவு வழித்தோன்றல்களான திரு.திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் இல்லறவாழ்வின் பொன்விழா நிறைவு நாளை முன்னிட்டு சகோதரங்களின் நிதிப்பங்களிப்பில் இன்றைய நாளில் சமைத்த உணவு பொதி செய்யப்பட்டு கிராமங்களில் வாழும் தாயக உறவுகளின் இல்லங்களுக்கு சென்று வழங்கப்பட்டது.

காலத்தின் அவசியமான தேவையினை கருத்திற் கொண்டு நீடித்துக் கொண்டிருக்கும் ஊரடங்கு சட்டமும், பயணத்தடையும் சகல மக்களையும் ஏதோ ஒருவகையில் பாதிப்படைய வைத்துள்ளது.. அதுவும் நாளாந்த கூலித்தொழிலாளர்களை மிகவும் பாதிப்புற வைத்துள்ளது..

இதனை கருத்திற் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கனடாவில் பொன்விழா திருமண மங்கல நன்னாளைக் கொண்டாடும் திரு.திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் திருமண சிறப்பினை அவர்களின் சகோதரங்கள் சார்பாக சுவிஸில் வாழும் லுக்ஸ் அண்ணன் என அழைக்கப்படும் திரு.சின்னத்துரை இலக்ஷ்மணன் அவர்களின் நிதி ஆதரவில் அவரின் வேண்டுகோளுக்கமைவாக சமைத்த பொதி செய்யப்பட்ட விசேட மதிய உணவு வழங்கப்பட்டது..

திரு.திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் பொன்விழா திருமண நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளுடன், கோழிக்கூட்டினை வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு திரு லுக்ஸ் அண்ணன் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போதைய கொரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு சற்று காலதாமதமாகி வழங்கப் பட உள்ளது..

இருப்பினும் இன்றைய நாள் திரு.திருமதி சரவணபவான் இந்துராணி தம்பதிகளின் பொன்விழா திருமண நாள் என்பதால் உடனடியாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சமைத்த உணவுப் பொதிகள் தாயக மக்களுக்கு வழங்கப்பட்டது.

திருமண பொன்விழாவை சிறப்பாக கொண்டாடும் தம்பதிகளுக்கு தாஈயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய மங்கலகரமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இந்நாளை முன்னிட்டு தாயக உறவுகளுக்கு விசேட மதிய உணவினை வழங்க நிதிப்பங்களிப்பு செய்த சுவிஸ்வாழ் தமிழுறவான லுக்ஸ் அண்ணன் என அறியப்பட்ட திரு சின்னத்துரை இலக்ஸ்மணன் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

05.09.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.