அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை நினைவாக, கொரோனா இடர்கால உதவி.. (படங்கள்)
அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு கொரோனா இடர்கால உதவி..
##########################
ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாக உதவி கோரிய உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் தொடர்ச்சியான பயணத்தடை காரணமாக மிகவும் இக்கட்டான நிலையில் வாழும் குடும்பங்களுக்கு தங்களது தாய், தந்தையரை நினைவு கூர்ந்து ஆடி அமாவாசை விரதநாள் தானமாக பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும்படி சுவிஸ் பேர்ண் பிறம்காடின் என்னுமிடத்தில் வசிக்கும் கந்தையா குணரட்ணம் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை அவர்கள் நினைவாக வவுனியா பாரதிபுரம் பத்து வீட்டுத் திட்டக் கிராமத்தில் “மாணிக்கத்தின் நற்பணி மன்றத்தின்” கிராமிய இணைப்பாளர் திருமதி. செல்வராணி அவர்களின் ஒழுங்கமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விசேட தேவையுடைய குடும்பங்கள், உழைப்பாளர் இல்லாத குடும்பங்கள், வயோதிப நோயாளர் குடும்பங்கள் என பலதரப்பட்ட தேவைகளுடைய குடும்பங்கள் கிராமிய இணைப்பாளரால் இனங்காணப்பட்டு அக்குடும்பங்களுக்கு அமரர்கள் கந்தையா சீதேவன்பிள்ளை அவர்கள் நினைவாக ஆடி அமாவாசை விரதநாள் தானமாக உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் உடனடியாக சுவிஸ்வாழ் தமிழுறவான கந்தையா குணரட்ணம் அவர்கள் தனது தாய், தந்தையான கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நிளைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கு வழங்கிய நிதியில் ஏற்கனவே ஒரு பகுதியை ஆடி அமாவாசை விரத நாளன்று சிவபுரம் பாலாமைக்கல் கிராமிய இணைப்பாளரின் அவசர வேண்டுகோளுக்கமைவாக இரவு நேரத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு உதவிகளை குறிப்பாக கோழிகளுடன் கோழிக்கூடும் தமது தாய், தந்தையர் நினைவாக வழங்கவுள்ளார்கள். இருப்பினும் தற்போதைய பயணத்தடை நீங்கியவுடன் அவ்வுதவிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நடைமுறைப்படுத்தும் என கூறிக் கொள்வதோடு, இதனை நிதிப்பங்களிப்பு செய்தோர்களான அமரர் கந்தையா சீதேவன்பிள்ளை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகின்னோம். இருப்பினும் இன்னும் ஒரிரு நாட்களில் வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்படவுள்ளது.
யாழ். மாவிட்டபுரம் இடத்தைச் சேர்ந்தவரும், சுவிஸில் பேர்ண் பிரேம்கர்டேன் இடத்தில் வசிக்கும் திரு.கந்தையா குணரெட்னம் அவர்கள் தனது பெற்றோரான அமரர்கள். கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் நினைவாக “ஆடி அமாவாசையை” முன்னிட்டு அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வழங்கிய வாழ்வாதார உதவிகள்.. தற்போதைய நாட்டின் பொதுமக்கள் முடக்கத்தின் பாரிய தேவையை குறைத்துள்ளது. இவ்வாறான காலத்திற்கேற்ப தங்களின் குடும்ப உறவுகளின் நினைவாக சமூகப்பங்களிப்பு வரவேற்கத்தக்கது.
உதவி வழங்கிய சுவிஸ்வாழ் உறவான கந்தையா குணரட்ணம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம் அமரத்துவமடைந்த கந்தையா சீதேவன்பிள்ளை ஆகியோரின் ஆத்மசாந்திக்காக எல்லாம்வல்ல இறைவனை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வேண்டி கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
05.09.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1