பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு, மடிக்கணனி வழங்கி வைப்பு.. (வீடியோ, படங்கள்)
பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கு, மடிக்கணனி வழங்கி வைப்பு.. (வீடியோ, படங்கள்)
###################################
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணம் என அழைக்கப்படும் திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாணவி ஒருவருக்கு ஒன்லைன் மூலமாக கல்வியை மேற்கொள்ளும்முகமாக மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் முன்ளாள் முல்லை மாவட்ட கல்விக்கழக பொறுப்பாளராக இருந்த விடுதலைப் புலிகளின் போராளியான அன்பு என்பவரின் இரண்டாவது மகளுக்கு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய 93.96 மாணவர்களின் நற்பணி மன்றத்தினால் மேற்படி பயனாளி தெரிவு செய்யப்பட்டு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சற்குணம் என அழைக்கப்படும் புங்குடுதீவில் பிறந்து கனடாவில் வசிக்கும் குணராஜா நிர்மலராஜா (சற்குணம்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அமரர் முத்தையா குணராஜா அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பிலும் , கனடாவிலிருந்து வருகை தந்த திரு.அன்பரசன் (லவன்) தனது மகள் செல்வி.அன்செயா அவர்களது பிறந்த நாள் பரிசாகவும் இதனை வழங்கி இருந்தனர்.
“1993..1996 வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் நற்பணி மன்றம்” இவ்வேற்பாட்டினை செய்திருந்தது., இவர்களுடன் “கனடா நம்தாயகம்” உரிமையாளர்களில் ஒருவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கனடா இணைப்பாளர்களின் ஒருவருமான திரு.குணராஜா உதயராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில், இந்நிகழ்வு நடைபெற்றது.
இப்பணிக்கான தாயக ஒழுங்குகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கமைவாக குறித்த பிரதேசத்தில் வசிக்கும் மாணவியின் இல்லத்தில் மடிக்கணினி வழங்கும் பூர்வாங்க ஒழுங்கமைப்பினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” மேற்கொண்டு குறித்த மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்படுவதை உறுதிசெய்தது.
இறுதிப் போரில் யுத்தக் காயங்களினால் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே இயங்க முடியாத நிலையில். வாழ்வின் இறுதி நாளுடன் போராடிக் கொண்டிருக்கும் முன்னாள் போராளி அன்பு அவர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே இவ்வுதவி வழங்கப்படுவதாக “93.96 வவு. ம.ம. வித்தியாலய மாணவர்களின் நற்பணி மன்றத்தின்” நிர்வாகிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் தெரிவித்தனர்.
மடிக்கணினியை பெற்றுக் கொண்ட மாணவி “தனது தந்தையாரின் நிலமையினை கூறி தனக்கு இவ்வாறான உதவியை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதோடு, பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.குணராஜா நிர்மலராஜா (சற்குணம்) அவர்களுக்கும், செல்வி.அன்செயா அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொண்டார்.
இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் திரு குணராஜா நிர்மலராஜா (சற்குணம்) அவர்களுக்கும், செல்வி.அன்செயா அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தெரிவித்துக் கொள்வதோடு இப்பணிகளோடு திரு குணராஜா நிர்மலராஜா (சற்குணம்) சார்பில், அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா சாம்பல் தோட்டத்தில் கணவரால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளோடு வசிக்கும் குடும்பத்தலைவிக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளும் கோழிக் கூடும் வழங்கப்படவுள்ளதையும், மேலும் சிலருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட உள்ளதையும் இங்கே விசேடமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
இவ்வாறான பல்வேறு சமூகநலப் பங்களிப்பினை, அமரர்.முத்தையா குணராஜா குடும்பத்தின் சார்பாக, தொடர்ந்து வழங்கி வரும் கனடாவாழ் “கனடா நம் தாயகத்தின்” நிறுவன உரிமையாளர்களில் ஒருவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கனடாக்கிளை இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.குணராஜா உதயராஜா அவர்களுக்கும், கனடா திரு.அன்பரசன் (லவன்) அவர்களுக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
19.09.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1