கனடா சற்குணம் அவர்களின் பிறந்த நாளில், தாயக உறவுகளுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)
கனடா சற்குணம் அவர்களின் பிறந்த நாளில், தாயக உறவுகளுக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ)
##############################
புங்குடுதீவை பூர்வீகமாக கொண்டவர்களும் தற்போது கனடாவை நிரந்தர வசிப்பிடமாக வாழ்ந்து வரும் அமரர்.முத்தையா குணராஜா குடும்பத்தின் ஆணிவேராக இருந்து பாசத்தையும், நேசத்தினையும் ஊட்டி வளர்த்த சற்குணம் என எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களின் பிறந்தநாள் (19.09) இன்றாகும்.
திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களது பிறந்த நாளில் அவரது உடன்பிறப்பும், கனடா நம் தாயக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் ஒருவரும், கனடா மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான பல்வேறு சமூகப் பணிகளை தன்னலமற்று செய்து வரும் சமூகநேயன் குணராஜா உதயராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் பலதரப்பட்ட வாழ்வாதார உதவிகள் தாயகத்தில் வழங்கப்பட்டு வருகிறது..
இதன் முதற்கட்டமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் முல்லை மாவட்ட கல்விக் கழகப் பொறுப்பாளராக இருந்து இறுதி யுத்தத்தில் விழுப்புண் அடைந்து முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் அன்பு அவர்களின் இரண்டாவது மகள் யாழ் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவரின் கல்வி மேம்பாட்டுக்கு மடிக்கணினி “1993 1996 வவுனியா வவுனியா மத்திய மகா வித்தியாலய நற்பணி மன்ற” உறுப்பினர் திரு.அன்பரசன் (லவன்) உடன் இணைந்து வழங்கப்பட்டது..
இதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில், வவுனியா சாம்பல் தோட்டத்தில் கணவர் சித்தசுவாதீனம் அடைந்து பிரிந்து சென்ற நிலையில் இரண்டு குழந்தைகளோடு மிகவும் வறிய நிலையில். வசித்து வரும் திருமதி அருள் மஞ்சுளா என்ற குடும்பத் தலைவிக்கு மிகப் பெரிய கோழிக்கூடு, கோழிகளும் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையின் கௌரவத் தலைவரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான தோழர் சிவம் என அழைக்கப்படும் திரு.சுப்பையா ஜெகதீஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த வாழ்வாதார உதவியினை வழங்குவதாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதிலும் அத்தினத்தில் மழையின் காரணமாக கோழிக்கூடுகள் நிறைவடையாத நிலையில் மறுநாள் மிக முக்கியமான அரச உயர்மட்ட கலந்துரையாடலில் தவிசாளர் அவர்கள் கலந்து கொள்வதினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வுக்கு அவரால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொலைபேசி மூலம் தெரிவித்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சேவைகள் தொடர வேண்டும், வரும் நிகழ்வுகளில் கலந்து சிறப்பிப்பேன்” எனவும் வாழ்த்தி இருந்தார்.
இதன் காரணமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மாவட்ட இணைப்பாளரும், நிர்வாகசபை உறுப்பினருமான திருமதி நவரத்தினம் பவளராணி அவர்கள் கலந்து கொண்டு குறித்த வாழ்வாதார உதவி திட்டத்தை நடாத்தி முடித்தார்.
அந்தவகையில் வாழ்வாதார உதவிக்கான பெயர்ப்பலகையினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் அவர்கள் திரைநீக்கம் செய்து குறித்த பயனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கலை ஆரம்பித்து வைத்ததுடன், மன்றத்தின் உப செயலாளரான திருமதி பெரியண்ணன் பரிமளா அவர்கள் பயனாளிக்கு கோழிகளை வழங்கி வைத்து கோழிக்கூட்டினையும் திறந்து வைத்தார். இவருடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி செல்வராணி, மற்றும் ஊர்மக்கள் சிலர் கலந்து கொண்டு கோழிகளை கூட்டுக்குள் வைத்தனர்.
வர்த்தக நிலையங்கள் அடைக்கப்பட்ட நிலையிலும், குறித்த வாழ்வாதார உதவி வழங்கப் படவேண்டும் என மிகவும் சிரம்ப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக முடிக்கப்பட்டது. கோழிக் கூட்டுக்குரிய மூலப் பொருட்கள் அங்கும் இங்குமாக தேடி அலைந்து கொள்முதல் செய்யப்பட்டு தொடர்ந்து நான்கு நாட்களாக தொடர்பணி செய்யப்பட்டு மிகப் பெரிய அளவில் கோழிக் கூடு நிறைவு செய்யப்பட்டது.. கொரோனா பெருந்தொற்று காரணமாக சாதாரணமாகவே எந்தவொரு பணிகளும் இலகுவாக நடப்பதில்லை இருந்தும் கோழிக் கூடு நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உறுதியாக வந்துள்ளது சிறப்பானதாகும்.
மேற்படி வாழ்வாதார உதவியிப் பெற்றுக் கொண்ட திருமதி அருள் மஞ்சுளா அவர்கள் நன்றி கூறும் போது.. “கொரோனா இடர்கால உலருணவுப் பொதி வழங்க வந்தபோது, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளிடம் எனது வறுமை நிலையினை எடுத்துக் கூறி இருந்தேன். அவர்களிடம் வாழ்வாதார உதவியாக கோழிக் கூடு கேட்டிருந்தேன். அதனை பதிவு செய்து விட்டுப் போனவர்கள், இப்போது மிகப் பெரிய கோழிக் கூட்டினை அமைத்து தந்துள்ளார்கள்..கடந்த மூன்று நாட்களாக எனது வீட்டிலே கோழிக்கூடு அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.. இடையில். மழை வந்து குறுக்கீடு செய்தாலும் கனடாவில் வசிக்கும் திரு.குணராஜா நிர்மலராஜா (சற்குணம்) அவர்களது இன்றைய பிறந்த நாள் அன்று என்னிடம் கோழிக்கூட்டினை கையளித்துள்ளார்கள்.. திரு.குணராஜா நிர்மலராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதோடு, இவ்வுதவியை செய்து தந்தமைக்காக அமரர்.முத்தையா குணராஜா குடும்பத்துக்கும், இவ்வுதவி எனக்கு கிடைக்க முன்னின்று பாடுபட்ட மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினருக்கும் கரம் கூப்பி வணங்கி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்..
நிறைவாக கிராமிய இணைப்பாளர் திருமதி செல்வராணி அவர்களது நன்றியுரையோடு பிறந்த நாள் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இனிதாக நிறைவேறியது.
இன்றைய நாளில் பிறந்த நாள் கொண்டாடும் திரு குணராஜா நிர்மலராஜா (சற்குணம்) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தெரிவித்துக் கொள்வதோடு, அமரர் முத்தையா குணராஜா குடும்பத்துக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
19.09.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1