;
Athirady Tamil News

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு வழங்கல் நிகழ்வு.. (படங்கள் வீடியோ)

0

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு வழங்கல் நிகழ்வு.. (படங்கள் வீடியோ)

#############################

சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில் (Bern) வசிப்பவருமான திரு.இராஜேந்திரம் இந்திரசீலன் “மடத்துவெளி சீலனின்” நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் வசிக்கும் திரு.திருமதி.ஜெகதீஸ்வரன் தமிழ்செல்வி குடும்பத்துக்கு உரிய வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடும், கோழிகளும், உலருணவுப் பொதியும்” வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” தலைவரும், முன்னாள் அதிபருமாகிய திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் தலைமையில் இன்று நடந்த இந்நிகழ்வில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” விசேட அழைப்பை ஏற்று, புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் வடமாகாண ஆளுனரின் செயலாளரும், தற்போதைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான மதிப்புக்குரிய திரு.இலட்சுமனண் இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக புங்குடுதீவு தெற்கு பலநோக்கு சங்க முகாமையாளர் திருமதி பாலசிங்கம் பொற்பாவை, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” யாழ்.மாவட்ட அமைப்பாளர் திரு.விமலதாஸ், கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் போன்றோரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

அதேபோல் பயனாளிகள் குடும்பத்தின் சார்பில் திருமதி.தமிழ்ச்செல்வி ஜெகதீஸ்வரன் அவர்களும், அவரது தந்தையான “சுண்ணாம்பு சந்திரன்” என அன்புடன் அழைக்கப்படும் திரு.சுப்ரமணியம் நாகரெத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில் (Bern) வசிப்பவருமான “மடத்துவெளி சீலன்” எனும் திரு.இராஜேந்திரம் இந்திரசீலன் குடும்பத்தினர் வழங்கி இருந்தனர். இந்நிகழ்வுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாக்க் கொண்ட சுவிஸில் வதியும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பிரதம அமைப்பாளர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் மற்றும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” சுவிஸ் செயற்பாட்டாளர்களில் ஒருவரான குழந்தை எனும் திரு.வி.அ.கைலாசநாதனும் மேற்கொண்டு இருந்தனர்.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துடன்” இணைந்து விருந்தினர்களாலும், பயனாளிகளாலும் மேற்படி வாழ்வாதார உதவியை வழங்கிய சுவிஸில் வாழும் மடத்துவெளி சீலனின் குடும்பத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் நிகழ்வின் பிரதம விருந்தினராய் கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மதிப்புமிகு திரு.இலட்சுமணன் இளங்கோவன் அவர்கள் பல்வேறு பணிச்சுமைகளுக்கு மத்தியிலும் குறித்த நேரத்தில் நிகழ்வில் கவந்து கொண்டதுடன் நிகழ்வு நிறைவுபெறும் வரையிலும் இருந்து நிகழ்வை பெருமைப்படுத்தியமைக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் தாயக உறவுகளின் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்வாதார உதவிக்கான நியுதவியினை வழங்கிய மடத்துவெளி சீலன் என அழைக்கப்படும் திரு இராஜேந்திரம் இந்திரசீலன் குடும்பத்திற்கு தாயக உறவுகள் சார்பில் நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.10.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.