;
Athirady Tamil News

கனடாவில் “டானியல் அபிரா” திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

கனடாவில் “டானியல் அபிரா” திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
##################################

கனடாவில் நேற்றுமுன்தினம் திருமண பந்தத்தில் இணையும் புதுமணத் தம்பதிகளின் திருமண நாளினை முன்னிட்டு தாயகத்தில் பல்வேறு சமூகநலப் பணிகளை புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவர்களும் கனடாவை வசிப்பிடமாக கொண்டவர்களுமான அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

புங்குடுதீவைச் சேந்தவர்களும் கனடாவில் வசிப்பவர்களுமான அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் “டானியல் அபிரா” திருமண நாளினை முன்னிட்டு பல்வேறு சமூக நல அறப்பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கனடாவில் திருமண பந்தத்தில் இணையும் “டானியல் அபிரா” தம்பதிகளின் திருமண நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் அமரர் முத்தையா குணராஜா அவர்கள் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் தாயக கிராமத்து மக்களுக்கு திருமண விருந்துபசாரம் வழங்கப்பட்டது..

அதேவேளை தேக்கம் தோட்டம் வவுனியா எனும் முகவரியில் வசிக்கும் விபத்தொன்றினால் காயமடைந்து நடக்க முடியாத நிலையில் தொழிலுக்கு செல்ல முடியாத கூலித் தொழிலாளியான நான்கு பிள்ளைகளின் தந்தையான மகேசன் ஜெயச்சந்திரன் குடும்பத்திற்கு அவர்களின் குடும்பத்தின் பொருளாதார விருத்திக்காக வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கப்பட்டது.

குறித்த பயனாளியான ஜெயச்சந்திரன் மேசன் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது தவறுதலாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து படுகாயங்களுக்குள்ளாகி கால் முறிந்த நிலையில் வங்கி முன்னிலையில் யாசகம் பெற்று வாழும் நிலையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் தனது வாழ்வாதார கோரிக்கையினை முன் வைத்து வீடியோ ஒளிப்பதிவினை தந்துள்ள போது மன்றத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் இவரின் கோரிக்கையினை மிகத் தீவிரமாக பரிசீலுத்து இவருக்கான உதவி வழங்களை அனுமதித்தது.

அந்தவகையில் இன்றைய நாளின் புதுமணத் தம்பதிகளாக திருமண பந்தத்தில் இணையும் “டானியல் அபிரா” தம்பதிகளின் திருமண நாளினை சிறப்பிக்கும் வகையில் அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் மிகப் பெரிய கோழிக் கூடு வாழ்வாதார உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.

வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் சுதா என அழைக்கப்படும் திருமதிஜெபநேசராணி அவர்கள் கலந்து கொண்டாலும் மிக முக்கிய விடயமாக செல்ல வேண்டிய இருப்பதாக கூறி சென்றார். அதன் பின் சற்று காலதாமதமாகி உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் இரவு என பாராது பலரும் கலந்து கொண்டு ஆதரவைத் தந்தனர்.. குறிப்பாக தேக்கம் திட்டம் கிராம சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவரும், திரைப்பட குறும்பட நடிகருமான வில்லன் சசி என அழைக்கப்படும் சசிகுமார் அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார உதவி தொடர்பான பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்து உத்தியோகப் பூர்வமாக கோழிக் கூடு வழங்கும் நிகழ்வைத் தொடக்கி வைக்க, மாணிக்கதாசனின் நற்பணி மன்றத்தின் மாவட்ட இணைப்பாளரும் நிர்வாக சபை உறுப்பினருமான திருமதி நவரத்தினம் பவளராணி கோழிகளை வழங்கி வைக்க நிகழ்வில் கலந்து கொண்டோர் கோழிகளை கோழிக் கூட்டினுள் வைத்தனர்.

கனடாவில் திருமணத்தில் இணையும் “டானியல் அபிரா” தம்பதிகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் உறவினரும், சமூகத்தை நேசிக்கும் நல்லுள்ளம் கொண்ட குடும்பமுமாகிய அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தினர் திருமண விருந்துபசாரம் மற்றும் வாழ்வாதார உதவி என பல்வேறு சமூகநல உதவிகளை வழங்கி தாயக உறவுகளுக்கு உதவி செய்துள்ளனர்..

குறிப்பாக கனடாவில் வசிக்கும் கனடா நம் தாயகம் நிறுவன குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரும், கனடா மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.குணராஜா உதயராஜா அவர்களின் இடைவிடாத முயற்சியின் பலனாகவே இவ்வாறான உதவிகளை தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கக் கூடியதாக உள்ளது. எனவே இவ்வேளையில் திரு உதயராஜா அவர்களுக்கு விசேடமாக நன்றியினை தாயக உறவுகள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறது.

அதேவேளை திருமண பந்தத்தில் இணையும் டானியல் அபிரா தம்பதிகள் சீறும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல பரம்பொருளை தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வேண்டிக் கொள்கிறது.

இந்நிகழ்வுக்கான அனைத்து நிதியுதவிகளையும் அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

13.10.2021

கனடா “டானியல் அபிரா” திருமண நன்னாளில் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.