பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (படங்கள் வீடியோ)
பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (படங்கள் வீடியோ)
##########################################
யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்ட சுவிஸ் நாட்டில் பிறந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், தாயகத்தில் “மாணிக்கதாசன் இலவச மறுமலர்ச்சிக் கல்விக் கூடத்தில்” மிக விமர்சையாக மாணவர்கள் பெற்றோர்கள் பங்களிப்புடன் இனிதாக கொண்டாடப்பட்டது.
பிரான்ஸ் பாரீசில் வாழும் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்தநாள் அவர்களது நிதிப் பங்களிப்புடன் தாயக கிராமமொன்றில் கொண்டாடப்பட்டது. மாணிக்கதாசன் இலவச மறுமலர்ச்சி கல்விக் கூடத்தின் பொறுப்பாசிரியையும், முன்பள்ளிகளுக்கான இணைப்பாளருமான திருமதி வேஜினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாணவர்கள், பெற்றோர்கள், சமுர்த்தி சங்கத்தின் செயலாளர் திருமதி மது.சுலக்சனா, பொருளாளர் திருமதி மணிவண்ணன் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி மாணவர்களின் பெரும் சந்தோசத்தின் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பெருமளவான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்ட இந்திகழ்வில் பிறந்தநாள் கேக் அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன்.திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் நிதிப் பங்களிப்பில் பிறந்தநாளினைக் கொண்டாடும் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்தநாள் பரிசாக பாடசாலை செல்லும் அத்தனை மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கிராமிய சமுர்த்தி சங்கத்தின் செயலாளர் திருமதி மது சுலக்சனா, பொருளாளர் திருமதி மணிவண்ணன் கலைவாணி ஆகியோருடன் முன்பள்ளிகளுக்கான இணைப்பாளரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “மாணிக்கதாசன் இலவச கல்விக் கூடத்தின்” பொறுப்பாசிரியையுமான திருமதி வேஜினி அவர்களும் மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்..
மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அமைந்நிருந்த்து.
தனது முப்பத்திநான்காவது பிறந்த நாளைக் கொண்டாடும் பாரீஸ்வாழ் திருமதி.உமாசங்கர் ஜெனனி அவர்களை நீண்ட ஆயுளோடு தேக ஆரோக்கியம் பெற வேண்டி தாயக உறவுகளோடு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வாழ்த்தி மகிழ்கின்றது. மேற்படி திருமதி.உமாசங்கர் ஜெனனி அவர்களின் தந்தையாரான சுவிஸில் (தூணில்) வாழும் வர்த்தகர், முருகன் தொண்டரான அச்சுவேலியை சேர்ந்த திரு.சுபாஷ்கரன் (ராஜு) அவர்களும் பல சமூகப் பங்களிப்புகளை மக்களுக்காக செய்து வருபவர் என்பதும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” இயக்குனர் சபை உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்க திநிப்பங்களிப்பு செய்த திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி குடும்பத்தினருக்கு தாயக உறவுகள் மாணவர்கள் பெற்றோர்கள் சார்பில் மதிப்புமிகு நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் இவர்களின் நிதிப் பங்களிப்பில், மன்னார் மாவட்டத்தில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட உள்ளமையும் இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
27.10.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1