புங்குடுதீவு “கனடா; சுவிஸ்” அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு.. (படங்கள்)
புங்குடுதீவு “கனடா; சுவிஸ்” அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு.. (படங்கள்)
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.சிறினி பாலா, உபதலைவர் திரு.குணராஜா உதயராஜா ஆகியோர் தனிப்பட்ட விஜயமாக சுவிஸ் நாட்டுக்கு விஜயம் செய்வதை அறிந்து, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில் ” புங்குடுதீவின் எதிர்கால அபிவிருத்திகளை நோக்கமாகக் கொண்டு, “மரியாதை நிமித்தமான சிநேகபூர்வ சந்திப்பை” புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்) தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பானது அவசரகதியில் இருநாட்களுக்குள் மேற்கொள்ளப் பட்டததினாலும், இன்று வேலைதினம் என்பதினாலும் நிர்வாகசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தொலைபேசி, சமூகவலைத்தளங்கள் மூலம் அறிவித்திருந்த போதும், அனைவரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையிலும், தொலைபேசி மூலம் அனைவரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தனர்.
“சிநேகித பூர்வ சந்திப்பின்” முதல் நிகழ்வாக, கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.சிறினி பாலா அவர்களுக்கு புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பொருளாளர் திரு.சின்னத்துரை இலக்ஷ்மணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, ஆலோசனைசபை உறுப்பினர் திரு.வே.கிருஷ்ணகுமார் சந்தனமாலை அணிவிக்க , கனடா சங்க உபதலைவர் திரு.குணராஜா உதயராஜா அவர்களுக்கு ஆலோசனைசபை உறுப்பினர் திரு அரியபுத்திரன் நிமலன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, ஆலோசனைசபை உறுப்பினர் திரு.பா.தயாபரன் சந்தனமாலை அணிவிக்க, ஒன்றிய உறுப்பினர்களின் வாழ்த்துக்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.
மேற்படி பொன்னாடை போர்த்தல், மாலை அணிவித்தல் மரியாதையை “கனடா பழைய மாணவர் சங்க” தலைவர், உபதலைவர் இருவரும் முற்றுமுழுதாக நிராகரித்து அதனை ஏற்க மறுத்த போதிலும், நிகழ்வில் கலந்து கொண்ட சுவிஸ் ஒன்றிய முக்கியஸ்தர்கள், அவர்களின் குடும்பத்தினரின் நீண்ட வற்புறுத்தலுக்கு அமையவே இம்மரியாதையை ஏற்றுக் கொண்டனர். அதேபோல் கனடா பழைய மாணவர் சங்க தலைவர், உபதலைவர் இருவரினாலும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களும், சுவிஸ் ஒன்றிய பொருளாளர் திரு.சின்னத்துரை இலக்ஷ்மணன் அவர்களும், பதில் மரியாதை நிமித்தம் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் நீண்டநேரம் நடைபெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், “புங்குடுதீவின் வளர்ச்ச்சி கருதியும், புங்குடுதீவு மக்களின் எதிர்காலம் கருதியும் எம்மால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இணைந்து செயல்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் உரையாடப்பட்டதுடன், கனடா சங்கம், சுவிஸ் ஒன்றியங்களில் பொறுப்பில் உள்ளோர் முடிந்தவரை தனிநபர் தாக்குதலைத் தவிர்த்து விட்டுக்கொடுப்புடன் நடக்க வேண்டுமெனவும்” கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் மேற்கொள்ள வேண்டிய “மலசலகூடங்கள் அமைத்தல்” உட்பட புங்குடுதீவின் அபிவிருத்தி நடவடிக்கை, மற்றும் புங்குடுதீவின் நுழைவாயிலில் “வரவேற்பு வளைவு” அமைத்தல் போன்ற நடவடிக்கை குறித்தும் ஆக்கபூர்வமாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் புங்குடுதீவின் புலம்பெயர் அமைப்புக்கள் தங்களின் தனித்துவத்தை இழக்காமல், ஒற்றுமையாக “ஊர்நோக்கி” செயல்படுவது குறித்தும், இதுக்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதுவோர் “சிநேகபூர்வ மரியாதை நிமித்தமான தனிப்பட்ட சந்திப்பு” என்பதினால், எந்தவொரு விடயங்களும் உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் இராப்போசனத்துடன் சந்திப்பு நிறைவு பெற்றது.
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
01.11.2021