அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாக, முல்லைத்தீவில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாக முல்லைத்தீவில் மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
############################################
அச்சுவேலியைச் சேர்ந்த இராசாத்தி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அமரர் திருமதி தர்மலிங்கம் நாகேஸ்வரி அவர்களின் எட்டாமாண்டு நினைவு நாள் தாயக பிரதேசங்களில் பல்வேறுதரப்பட்ட பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு ஆத்தமசாந்தி நினைவாக அவர்கள் விரும்பி கேட்டுக் கொண்டதன்படி பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்ம சாந்தி பூசையும் அடியார்களுக்கான அன்னதானமும் வழங்கப்பட்டது.
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சாம்பல் தோட்டம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு ஆத்மசாந்தி வழிபாடும் அன்னதானப் பொதியும் வழங்கப்பட்ட அதேவேளை அதன் அயற் கிராமங்களான பம்மைமடு, புதிய கற்பகபுரம் மற்றும் பாரதிபுரம் கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொதி செய்யப்பட்ட மதிய உணவும் வீடு தேடிச்சென்று வழங்கப்பட்டது..
இது இவ்வாறு இருக்க.. இன்று (03.11) அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாக அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மிகவும் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள கிராமங்களான வேணாவில், நேசன் குடியிருப்பு, மல்லிகைத்தீவு கிராமங்களில் வாழும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு கணபதிப்பிள்ளை விஜிதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி சுபாநந்தினி ஜெயக்குமார் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
மூன்று கிராமங்களுக்கும் உணவுப் பொதிகளை கொண்டு சென்று வழங்குவதற்கு பெரிதும் உதவியை திரு செபஸ்தியாம்பிள்ளை ஜெகதாஸ் அவர்கள் வழங்கினார்.. தனது வாகனத்தில் உலருணவுப் பொதிகளை ஏற்றி இறக்கி பெரிதும் உதவியை வழங்கிய ஜெகதாஸ் அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறாக பல்வேறு சமூகநலப் பணிகளோடு அமரர் இராசாத்தி என அழைக்கப்படும் திருமதி தர்மலிங்கம் நாகேஸ்வரி அவர்களுடைய எட்டாமாண்டு நினைவு தினம் மிகவும் சிறப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது
அமரர் இராசாத்தி அவர்களின் எட்டாமாண்டு நினைவாகவும் அதேவேளை எதிர்வரும் தீபாவளி தீபத் திருநாளை முன்னிட்டும் மேற்படி உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமரர் இராசாத்தி அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இவ்வனைத்து நிகழ்வுகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தியது. அந்தவகையில் நிதிப்பங.்களிப்பினை வழங்கிய அன்னாரின் கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் எல்லோருக்கும் தாயக உறவுகளின் சார்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
குறிப்பாக இதனை முன்னின்று ஏற்பாடு செய்த அமரர்.இராசாத்தியின் மகனும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சுவிஸ் பிரதிநிதிகளில் ஒருவருமான பிரபல வர்த்தகரும், முருகன் தொண்டருமான சுவிஸ் தூணில் வதியும் ராஜு எனும் சுபாஸ்கரன் குடும்பத்தினருக்கும் எமது நன்றி.
அத்துடன் அமரர் இராசாத்தி அவர்களின் ஆத்மசாந்திக்காக எல்லாம்வல்ல பரம்பொருளை தாயக சொந்தங்களோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் மனமுருகி வேண்டிக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
10.11.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1