யாழ்-மாவிட்டபுரம் அமர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை ஆகியோர் நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
யாழ்-மாவிட்டபுரம் அமர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை ஆகியோர் நினைவாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
##################################
யாழ்ப்பாணம். மாவிட்டபுரத்தை சேர்ந்த அமரர்களான கந்தையா மற்றும் சீதேவன்பிள்ளை தம்பதிகளின் நினைவாக அன்னாரின் மகனும் சுவிசில் வசிப்பவருமான கந்தையா குணரட்ணம் அவர்களின் குடும்பத்தின் நிநிப் பங்களிப்பில் இராணி மில் வீதி சின்னப்புதுக்குளத்தில் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் திருமதி கேதீஸ் சுகர்தினி என்பவருக்கு இரண்டு தட்டுக்களை கொண்ட மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட மிகப் பெரிய கோழிக்கூடு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக மன்றத்தின் கிராமிய இணைப்பாளர் திருமதி பௌலினா அவர்களூடாக கிராம சேவையாளின் சிபார்சுடன் கிடைக்கப் பெற்ற வாழ்வாதார உதவி கோரல் விண்ணப்பத்தினை மன்றத்தின் நிறைவேற்றுக் குழுவினர் பரிசீலனை செய்த போது, எமக்கு நன்கறியப்பட்ட “டெய்லர் கந்தசாமி” அவர்களின் இரண்டாவது மகளே சுகர்சினி என அறிந்த போது அவரின் தற்போதைய உழைப்பாளர் இல்லாத பொருளாதார சிக்கலில் இரண்டு பிள்ளைகளோடு வசிக்கும் குடும்ப சூழலைக் கருத்திற் கொண்டு உடனடியாக அவர் கேட்டுக் கொண்ட வாழ்வாதார உதவியான கோழிக் கூடு வழங்கி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக இன்றைய நாளில் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வுக்கு விசேடமாக முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட வவுனியா நகரசபை கௌரவ உறுப்பினர் திரு.ஜோன் பெனட் கிரிஷ்தோப்பர் அவர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு திருமதி சுகர்சினி அவர்களுக்கு கோழிக் கூட்டினை வழங்கி வைத்தார். அந்நிகழ்வில் மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு பெருமாள் சஞ்சீவன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் திருமதி பவளராணி நவரட்ணம், இறம்பைக்குளம் கிராமிய இணைப்பாளர் திருமதி.பௌலினா அவர்களும், அயலவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்..
குறித்த நேரத்தில் வாழ்வாதார உதவி வழங்கல் தொடர்பான பெயர்ப் பலகையினை கௌரவ நகரசபை உறுப்பினர் திரு.ஜோன் பெடன் கிரிஷ்தோப்பர் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க வாழ்வாதார உதவியான கோழிகளை மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர் திரு.பெருமாள் அவர்களுடன் மாவட்ட இணைப்பாளர் திருமதி. பவளராணி அவர்களும் இணைந்து வழங்கி வைக்க.கலந்து கொண்ட ஏனையோர் கோழிகளை கூட்டுக்கு விட்டனர்.
வாழ்வாதார உதவியினை வழங்கிய கௌரவ நகரசபை உறுப்பினர் தனதுரையில் “இதுவே தற்போதைய சூழலில் கவனிக்கப்பட வேண்டிய பொருத்தமான உதவியாகும் எனக்கு டெய்லர் கந்தமாமி குடும்பத்தை நன்கு தெரியும். இந்த உதவி மிகப் பெரியது இதனை உரிய முறைய உயரிய வடிவத்தில் பயன்படுத்து பலனைப் பெற முயற்சி பொருளாதார மேம்பாட்டைக் காண வேண்டும்.. சுகரசினி ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.. மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இவ்வாறான பணிகளை பாராட்டுகின்றேன் மேலும் மேலும் நற்சேவையினை தொடர்ந்து செய்க” என உரையாற்றினார்.
தொடர்ந்து வாழ்வாதார உதவினை பெற்றுக் கொண்ட கணவரை இழந்த சுகர்சினை நன்றி கூறும் போது “நான் இவ்வாறான பெரிய கோழிக் கூடு கிடைக்குமென நான் நினைக்கவில்லை, என் குழந்தைகளின் சார்பாக எல்லோருக்கும் நன்றி கூறுகிறேன்.. குறிப்பாக கந்தையா குணரட்ணம் அவர்களுக்கு கைகூப்புகிறேன். ஐயா நீங்கள் வழங்கிய உதவி பேருதவி ஐயா.. இந்நேரத்தில் அமரத்துவமடைந்த கந்தையா.. சீதேவன்பிள்ளை ஆகியோருக்கு மனமார்த்த ஆத்மசாந்தி அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்”.. என்றார்.
நிறைவாக வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் குளிர்பானங்களுடன் சிற்றுண்டி வகைகளும் பரிமாறப்பட்டது.
அமரர்களான கந்தையா, சீதேவன்பிள்ள அவர்களின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவணை வேண்டுவதோடு, திரு.கந்தையா குணரட்ணம் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
வாழ்வாதார டெய்லர் கந்தசாமிஅவர்களின் தன்னலமற்ற சேவையினை கருத்திற் கொண்டு அவரது மகளான கணவரை இழந்து பிள்ளைகளுடன் வறுமையின் கோரமுகத்திற்கு தினமும் முகம் கொடுத்து வாழ்ந்து வரும் திருமதி சுகர்சினி அவர்களுக்கு திருப்தியான வாழ்வாதார உதவி வழங்கி சந்தோசத்துடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் எல்லோரிடமும் விடைபெற்று மன்றம் திரும்பினோம்..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
22.11.2021
அமரர்களான கந்தையா சீதேவன்பிள்ளை நினைவாக, கொரோனா இடர்கால உதவி.. (படங்கள்)
அமரர்களான கந்தையா, சீதேவன்பிள்ளை நினைவாக, ஆடி அமாவாசை விரத உதவி (வீடியோ படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1