மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர் வாழ்வாதார உதவி.. (படங்கள்)
மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர் வாழ்வாதார உதவி.. (படங்கள்)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவுதினமன்று புலம்பெயர் புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் சில வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு இருந்தோம். அதில் ஒருவரான புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு.செல்லத்துரை தவராசா (தோழர். தேவண்ணர் -கிளாரூஷ்) “தான் மிகவிரைவில் தாயகம் செல்லவுள்ளதால், அங்கு நாம் குறிப்பிடும் இடத்தில் நாம் குறிப்பிடும் பயனாளிக்கு, நாம் குறிப்பிடும் விருந்தினர் ஊடாக “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக விரும்பிய வாழ்வாதார உதவியை வழங்கி வைப்பதாக உறுதி அளித்து இருந்தார்.
அந்த வகையில் கடந்தவாரம் தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்று இருந்த புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு.தேவண்ணர் (கிளாரூஷ்) அவர்களின் நிதிப் பங்களிப்பில், யாழ் நிலாவரைக் கிணறு இருக்கும் நவற்கிரியிலிருந்து, மிகவும் சிரமத்துக்கு மத்தியில் யாழ்.புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு சென்று தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி செல்வி.கீர்த்தனா சிவகரன் அவர்களுக்கு, “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிகழ்வின் அடிப்படையில், துவிச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி இருந்தார். மேற்படி மாணவி செல்வி.கீர்த்தனா சிவகரன் அவர்களின் தந்தையாரான திரு.சிவகரன் மிதிவெடியில் சிக்கி ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இன்றையதினம் பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி சிறுப்பிட்டி மத்தியில் இலங்கைவங்கி வீதியை வதிவிடமாகவும் கொண்ட, கைம்பெண்ணான திருமதி.சித்திரவேல் வெள்ளையம்மா அவர்களின் மகளும், நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில், தரம் எட்டில் கல்வி பயிலும் செல்வி.கரன்சிகா சித்திரவேல் எனும் மாணவியின் கல்வி முயற்சிக்காக இருபத்தையாயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
மேற்படி வாழ்வாதார உதவிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிகழ்வில், “மாணிக்கதாசன் பவுண்டேஷனின் தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் திரு.சுவிஸ்ரஞ்சன்” அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறப்பு விருந்தினராக புளொட் அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ பா.கஜதீபன் அவர்கள் கலந்து கொண்டு மேற்படி உதவியினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நிதிப்பங்களிப்பு வழங்கிய புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. தேவண்ணர் (கிளாரூஷ்), புளொட் அமைப்பின் பிரதிநிதியும், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திரு. ஞா.கிஷோர் ஆகியோருடன் பயனாளிகளும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
இதேவேளை கௌரவ திரு.பா.கஜதீபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்னும் சிலருக்கும் வாழ்வாதார உதவியை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக வழங்கி வைக்க புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. தேவண்ணர் (கிளாரூஷ்) அவர்கள் முன்வந்துள்ளார் என்பதையும், அந்நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது என்பதையும் அறிய தருகிறோம்.
மேற்படி நிகழ்வில் எமது வேண்டுகோளை ஏற்று கலந்து சிறப்பித்த கௌரவ திரு.பா.கஜதீபன், திரு. ஞா.கிஷோர் ஆகியோருக்கும், நிதிப் பங்களிப்பு வழங்கிய புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. தேவண்ணர் (கிளாரூஷ்) அவர்களுக்கும் பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அமரர்.மாணிக்கதாசன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிக்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
24.11.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1