சுவிஸ் செல்வி.நிவேதா பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் செல்வி.நிவேதா பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கல்.. (படங்கள், வீடியோ)
#################################
யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டவர்களும், சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமநி வஜிகரன் நளினி தம்பதிகளின் செல்வமகள் செல்வி.நிவேதா அவர்களின் பிறந்தநாள் கடந்த 02.09.2021 அன்று மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் கொரோனா இடர்கால நெருக்கடிகளின் மத்தியிலும் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடப்பட்டது. அத்துடன் அந்நிகழ்வுக்கு வருகை தந்த பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் செல்வி,நிவேதா அவர்களின் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் தங்களின் மகளான நிவேதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வறிய நிலையில் வாழும தாயக உறவுகளை இனங்கண்டு அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிக்கூட்டினை வழங்கி வைக்கும்படி திரு.திருமதி வஜீகரன் நளினி தம்பதிகள் “மாணிக்கதாசன் நற்பசி மன்றத்திடம்” கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்றைய நாளில் சின்னத்தம்பனை வேலன்குளத்தினைச் சேர்ந்த மிகமிக வறுமையிள்ள மூன்று சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண் தலமைத்துவ குடும்பத்திற்கு, வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு வினோ அவர்களால் இனங்காணப்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் கணவரால் கைவிடப்பட்டு மூன்று பிள்ளைகளுடன் மிகவும் வறிய நிலையில் வசிக்கும் திருமதி செல்வராஜ் திலகவதி என்பவருக்கே கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டது.
செல்வி நிவேதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் மடுக்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம்.மற்றும் ஸ்ரீமுத்துமீனாச்சி அம்மள் ஆலய தலைவருமான திரு .சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த வாழ்வாதார உதவியினை வழங்கி வைத்தார்.
முன்னதாக வாகனத்தில் கொண்டு வந்த கோழிக் கூட்டினை கிராம இளைஞர்கள் இறக்கி, திலகவதி அவர்களின் வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகியது..
வழங்கப்படும் வாழ்வாதார உதவி தொடர்பான பெயர்ப்பலகையினை ஆலய மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சந்திரகாந்தன் அவர்கள் பெயர்பலகையினை திரைநீக்கம் செய்து வாழ்வாதார உதவியான கோழிகளையும் வழங்கி வைத்தார். தொடர்ந்து மன்னார் மாவட்ட “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயற்பாட்டாளர் தோழர் ஜேம்ஸ் அவர்கள் கோழிகளை கூட்டுக்கு விட நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையோரும் கூட்டிற்குள் கோழிகளை விட்டனர்.
முடிவாக கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அவர்களின் உரையினைத் தொடர்ந்து வாழ்வாதார உதவியினைப் பெற்றுக் கொண்ட திலகவதி அவர்களினால், செல்வி.நிவேதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி ஏனையோருக்கு நன்றியினையும் கூறினார்.
மழையின் நடுவே வாழ்வாதாரப் பணியினை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” புலம்பெயர் உறவுகளோடு இணைந்து. “தாயகத்தின் வறிய நிலையினை போக்கும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தோடு” மீண்டும் பயனாளியை நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்கும்
அதேவேளை செல்வி நிவேதா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்தினை தாயக உறவுகளோடு தெரிவிப்பதோடு வாழ்வாதார உதவிக்காக நிதிப்பங்களிப்பு செய்த பெற்றோர்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
25.11.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1