;
Athirady Tamil News

புங்குடுதீவு ஊரதீவில், சுவிஸ் சீலனின் பங்களிப்பில் மேலுமொரு உதவிகள் வழங்கல்.. (படங்கள்)

0

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில், சுவிஸ் சீலனின் பங்களிப்பில் மேலுமொரு உதவிகள் வழங்கல்.. (படங்கள்)
#############################

சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில் (Bern) வசிப்பவருமான திரு.இராஜேந்திரம் இந்திரசீலன் (மடத்துவெளி சீலனின்) நிதிப் பங்களிப்பில், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் வசிக்கும் திரு.திருமதி.ஜெகதீஸ்வரன் தமிழ்செல்வி குடும்பத்துக்கு உரிய வாழ்வாதார உதவியாக “கோழிக்கூடும், கோழிகளும், உலருணவுப் பொதியும்” வழங்கும் நிகழ்வு இருமாதத்துக்கு முன்பாக, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” தலைவரும், முன்னாள் அதிபருமாகிய திரு.எஸ்.கே. சண்முகலிங்கம் தலைமையில், புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் வடமாகாண ஆளுனரின் செயலாளரும், தற்போதைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமான மதிப்புக்குரிய திரு.இலட்சுமனண் இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள, சிறப்பு விருந்தினர்களாக புங்குடுதீவு தெற்கு பலநோக்கு சங்க முகாமையாளர் திருமதி பாலசிங்கம் பொற்பாவை, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயலாளர் திரு.மாணிக்கம் ஜெகன், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா, “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” யாழ்.மாவட்ட அமைப்பாளர் திரு.விமலதாஸ், கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் போன்றோரும் கலந்து கொள்ள நடைபெற்றது நீங்கள் அறிந்ததே.

அதேபோல் பயனாளிகள் குடும்பத்தின் சார்பில் திருமதி.தமிழ்ச்செல்வி ஜெகதீஸ்வரன் அவர்களும், அவரது தந்தையான “சுண்ணாம்பு சந்திரன்” என அன்புடன் அழைக்கப்படும் திரு.சுப்ரமணியம் நாகரெத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பதும் நீங்கள் அறிந்ததே..

இதனைத் தொடர்ந்து, “சுவிஸில் வசிக்கும் மடத்துவெளி சீலனின்” நிதிப் பங்களிப்பில், அவர்களின் வீட்டு நிலைமை, தற்போதைய மழைக்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திரு. திருமதி தமிழ்ச்செல்வி ஜெகதீஸ்வரன் குடும்பத்தினருக்கு பெறுமதிமிக்க இரண்டு தரப்பால் (கூரைவிரிப்பு) வழங்கப்பட்டதுடன், அத்துடன் இவர்களுக்கு கோழிக்கூடு வழங்கிய தினமன்று, இவர்களுக்கு அண்மையில் வசிக்கும் வயதான தாயொருவர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றப்” பிரதிநிதிகளிடம் “தனது நிலைமையை சொல்லி, உதவி கேட்டு” இருந்தார். அதனால் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி.ஏகாம்பரம் ஜானகி குடும்பத்தினருக்கும் கடந்தவாரம் பெறுமதிமிக்க உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி வாழ்வாதார உதவிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” யாழ். மாவட்டப் பிரதிநிதிகளில் ஒருவரான திரு.விமலதாஸ் (விமல்) நேரடியாக சென்று வழங்கி வைத்தார்.

மேற்படி வாழ்வாதார உதவிகளுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை சுவிஸில் வதியும் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் பெர்னில் (Bern) வசிப்பவருமான “மடத்துவெளி சீலன்” எனும் திரு.இராஜேந்திரம் இந்திரசீலன் குடும்பத்தினர் வழங்கி இருந்தனர். இந்நிகழ்வுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாக்க் கொண்ட சுவிஸில் வதியும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பிரதம அமைப்பாளர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் மற்றும் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” சுவிஸ் செயற்பாட்டாளர்களில் ஒருவரான குழந்தை எனும் திரு.வி.அ.கைலாசநாதனும் மேற்கொண்டு இருந்தனர்.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துடன்” இணைந்து விருந்தினர்களாலும், பயனாளிகளாலும் மேற்படி வாழ்வாதார உதவியை வழங்கிய சுவிஸில் வாழும் மடத்துவெளி சீலனின் குடும்பத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

வாழ்வாதார உதவிக்கான நியுதவியினை வழங்கிய மடத்துவெளி சீலன் என அழைக்கப்படும் திரு இராஜேந்திரம் இந்திரசீலன் குடும்பத்திற்கு தாயக உறவுகள் சார்பில் நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
29.11.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” ஏற்பாட்டில், புங்குடுதீவு ஊரதீவில் கோழிக்கூடு வழங்கல் நிகழ்வு.. (படங்கள் வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.