அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது “திவச” சிரார்த்த தினம் தாயக கிராமத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.. (படங்கள்)
அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது “திவச” சிரார்த்த தினம் தாயக கிராமத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.. (படங்கள்)
############################
புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டவரும் கொழும்பு மருதானையில் பெரும் வர்த்தகரும், இறுதிக் காலத்தில் லண்டன் மாநகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான சொக்கர் என எல்லோராலும் அழைக்கப்படும் அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது வருடாந்த திவச சிரார்த்த தினம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் தாயக கிராமமொன்றில் இன்று 30.11.2021 அனுஸ்டிக்கப்பட்டது.
அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது திவச சிரார்த்த தினம் தாயக கிராமமொன்றில் பிரத்தியேகமாகக் ஏற்பாடு செய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது. தொடக்க நிகழ்வாக அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களின் திவச திதி நாளில் மலரஞ்சலி செலுத்தி தீப ஆரதனையோடு தேவபாராயணம் இசைக்கப்பட்டு வயோதிப தாதுவுக்கு தானம் வழங்கி ஆத்மசாந்தி அஞ்சலி செய்யப்பட்டது. நிகழ்வில் கிராமத்து மக்களும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த பெருமாள் சஞ்சீவன் மற்றும் திருமதி பவளராணி நவரடணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆத்மசாந்நி அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து திவச நிகழ்வுக்கு வருகை தந்த கிராமத்து மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
மீண்டும் பாடசாலைகள் ஆரம்பித்து நடைபெறும் நேரத்தில் கொரோனா தொற்று பரவலாக மீண்டும் பெருகிவரும் அபாயகரமான சூழ்நிலையில் அமரர் முருகேசு சொக்கலிங்கம் அவர்களது திவச சிரார்த்த தின நிகழ்விவுக்கு அநேக மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
அமரத்துவமடைந்த சொக்கர் என அழைக்கப்படும் அமரர்.முருகேசு சொக்கலிங்கம் அவர்களின் ஆத்மசாந்திக்காக எல்லாம்வல்ல பரம்பொருளான “தல்லையப்பற்று முருகனையும்” வேண்டுவதோடு அன்னாரின் திவச நிகழ்வுக்கும், மதிய உணவுக்குமான நிதியினை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக தாயக உறவுகளும் இறைவனை வேண்டி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
30.11.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1