தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா.. (படங்கள் வீடியோ)
தாயக பயணத்தின் போது, ஏழை மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்கினார் கனடா உதயராஜா.. (படங்கள் வீடியோ)
####################################
புங்குடுதீவில் பிறந்து கனடாவில் வசிப்பவரும், “நம் தாயகம்” உரிமையாளர்களில் ஒருவரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சர்வதேச இணைப்பாளருமான திரு குணராஜா உதயராஜா அவர்களின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மரக்காரம்பளை நெளுக்குளத்தில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பத்தில் உள்ள பாடசாலைக்கு செல்லும் மூன்று பிள்ளைகளின் எதிர்கால கல்வி சிறப்பினை கருத்திற் கொண்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின், “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக துவிச்சக்கர வண்டியினை திரு.குணராஜா உதயராஜா அவர்கள் நேரடியாக கடந்த மாதம் இரண்டாம் வாரம் வழங்கி வைத்தார்.
அண்மையில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சர்வதேச இணைப்பாளரும், கனடா நாட்டின் இணைப்பாளர்களின் ஒருவரும், கனடா “நம் தாயகம்” வியாபார குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவருமான கனடாவில் வசிக்கும் திரு குணராஜா உதயராஜா அவர்கள் தாயகத்திற்கு வருகை தந்திருந்தார்.
திரு குணராஜா உதயராஜா அவர்கள் தனது தாயக வருகையின் போது பல்வேறு சமூகநலப் பங்களிப்பினை வழங்கியுள்ளார். அத்தோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபையினரையும் சந்தித்து கலந்துயாடினார்.
அவ்வேளையில் பாடசாலை செல்லும் மிகவும் வறிய நிலையில் வாழும் குடும்பத்தை இனங்கண்டு அவ்வாறான குடும்பங்களில் வாழும் மாணவர்களுக்கும் பாடசாலை செல்வதை இலகுவாக்கும் வகையில் அக்குடும்பங்களில் வாழும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்க விரும்புவதாகவும், அதற்காள ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக் கொண்டதற்கமைவாக வவுனியா மரக்காரம்பளை கிராமத்தில் வசிக்கும் பாடசாலைக்கு நடந்து செல்லும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்திற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றினை திரு குணராஜா உதயராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில், அவர் நேரில் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களான திருமதி பரிமளம், திருமதி பவளராணி, திருமதி நாகரதி மற்றும் திரு.சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தின் உண்மை நிலையினை நேரில் கண்டறிந்த திரு.உதயராஜா அவர்கள் பாடசாலை செல்லும் மாணவர்களின் வறுமை நிலமையினை கேட்டறிந்து அம்மாணவர்களுக்கான பாடசாலை உடைகளுக்கான செலவினையும் ஏற்றுக் கொண்டு அவ்வுதவியினையும் வழங்கி வைத்தார்.
மேற்படி உதவியினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” போஷகர் திரு.கேதீஸ் அவர்களுடன் நிர்வாகசபை உறுப்பினர் திருமதி பவளராணி, ஆகியோர் இணைந்து நேரில் சென்று வழங்கி வைத்தனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
15.12.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1