;
Athirady Tamil News

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன் கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன் கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)
###############

சுவிஸ்வாழ் செல்வி சதீனா சுபாஷ்கரன் அவர்களது இருபத்தி நான்காவது பிறந்த நாள் நிகழ்வு தாயக கிராமங்களில் பல்வேறு நிகழ்வுகளாக இன்றையதினம் கொண்டாடப்பட உள்ளது.

யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவரும், சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வசிப்பவருமான “ராஜு” என அழைக்கப்படும் திரு.திருமதி. சுபாஸ்கரன் கேமேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரி “செல்வி. சதீனா” அவர்களின் 24 வது பிறந்தநாளை முன்னிட்டு, முதல் நடவடிக்கையாக இன்று மதியம் செல்வி. சதீனா அவர்களின் நிதிப் பங்களிப்பில், கற்குளம் சிதம்பரபுரம் வவுனியா எனும் எல்லைக் கிராமத்தில் வசிக்கும் தாயக உறவுகளுக்கு விசேடமாக அசைவ உணவு வழங்கப்பட்டது,

தற்போது செல்வி.சதீனா சுபாஷ்கரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கறகுளம் எனும் கிராமத்தில் வாழும் தாயக உறவுகளுக்கான விசேட அசைவ உணவுடனான மதிய போசனத்துடன், செல்வி.சதீனா அவர்களின் பிறந்தநாள் சிறப்பாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடப்படுகிறது. இதில் அக்கிராமத்தில் உள்ள குழந்தைகள், பெரியோர், பாடசாலை மாணவர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயலாளர் அவர்களுடன் நிர்வாகசபை உறுப்பினர்கள் திரு பெருமாள் சஞ்சீவன், திருமதி.ந.பவளராணி ஆகியோர் அக்கிராமத்துப் பெரியோருடன் இணைந்து நடத்தி இருந்தனர்.

பெருமளவான கிராம மக்கள் மதிய உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு செல்வி சதீனா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் மதிய உணவினையும் பெற்றுச் சென்றனர். அத்துடன் பாடசாலைக்கு சென்ற பிள்ளைகளும் பாடசாலை முடிந்தவுடன் செல்வி சதீனா அவர்களின் பிறந்த நாள் மதிய உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உணவுண்டு மகிழ்ந்தனர்.

இதேவேளை இன்றுமாலை செல்வி சதீனா அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் பாடசாலை உயர்கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு அடுத்த ஆண்டுக்கான முழுமையான கற்றல் உபகரணப் பொதியினையும் வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாடசாலை புத்தகப்பை, கொப்பிகள் மற்றும் கொம்பாஸ் என முழுமையான கற்றலுக்கு தேவையான அனைத்து வகையான கற்றலுக்கான உபகரணங்கள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி வைக்கப்பட உள்ளது.

இந் நிகழ்வானது மாணவ, மாணவிகளுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” திட்டங்களில் ஒன்றான “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தை மாதம் முதல் பாடசாலைகள் துவங்க உள்ள காரணத்தினால்.. விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெற்றோர் இல்லாத மாணவ மாணவிகளில் ஒரு தொகையினருக்கு என அனைவருக்குமான, அடுத்த வருடத்துக்கான தேவையான முழுமையான “கற்றல் உபகரணங்கள்” அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட உள்ளது. அத்துடன் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய மாணவ மாணவிகளுக்குமான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட உள்ளது.

செல்வி. சதீனா அவர்கள், சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணப் பெருமானான முருகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன் மென்மேலும் பல சகல கலைகளையும் பெற்று நீடூழி வாழ்வதுடன், புலம்பெயர் வாழ் இளம்தலைமுறைகள் இதுபோன்ற நிதிப் பங்களிப்பு மூலம் செய்யும் உதவிகளை தாயக உறவுகள் வரவேற்பதுடன்,

பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி. சதீனா அவர்களுக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், நிதிப் பங்களிப்பு வழங்கிய அவருக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

23.12.2021

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன் கொண்டாடப்பட்டது.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.