சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.தாயகத்து மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள் வழங்கினார்., (படங்கள், வீடியோ)
சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.தாயகத்து மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்..
###################################################################
யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ் பேர்ண் தூண் மாநிலத்தில் வதியும் “ராஜு” என அழைக்கப்படும் திரு.திருமதி.சுபாஸ்கரன் கேமேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரி செல்வி. சதீனா அவர்களின் 24 வது பிறந்தநாளை முன்னிட்டு, (23.12.2021) செல்வி. சதீனா அவர்களின் நிதிப் பங்களிப்பில், சிதம்பரபுரம் வன்னிக் கோட்டம் எனும் கிராமத்தில் வாழும் மாணவ, மாணவிகளுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” திட்டங்களில் ஒன்றான “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தை மாதம் முதல் பாடசாலைகள் துவங்க உள்ள காரணத்தினால்.. விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெற்றோர் இல்லாத மாணவ மாணவிகளில் ஒரு தொகையினருக்கு என அனைவருக்குமான, அடுத்த வருடத்துக்கான தேவையான முழுமையான “கற்றல் உபகரணங்கள்” அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் அந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய மாணவ மாணவிகளுக்குமான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
செல்வி சதீனா சுபாஷ்கரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமானது.அநேக பாடசாலை மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் செல்வி சதீனா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து பிறந்த நாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி செல்வி சதீனா அவர்களின் பிறந்த நாளினை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
செல்வி சதீனா அவர்கள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு அடுத்த வருடம் பாடசாலைக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க முழுமையான கற்றல் உபகரணங்களை பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவையுடையோர் குடும்பங்கள், வறிய நிலையில் வாழும்குடும்பங்கள், தாய் தந்தை இல்லாத பிள்ளைகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தக பாக், கொப்பிகள், கொம்பாஸ், பென்சில், பேனா என அனைத்து வசதிகளும் அடங்கிய கற்றல் பொதி வழங்கி வைக்கப்பட்டது.. இதனை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான திரு பெருமாள் சஞ்சீவன் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி வைத்தார்.
நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களைத் தவிர வேறு சில மாணவ மாணவியர்களும் செல்வி சதீனா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தமையினால் அவர்கள் அனைவருக்கும் அப்பியாசக் கொப்பிகள் திரு.சஞ்சீவன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
செல்வி சதீனா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கம் கற்றல் உபகரணங்கள் செல்வி சதீனா அவர்களின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் அநேகர் கலந்து கொண்டதால் ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்திற்கு வெளியே அனைவரையும் ஒன்று கூட்டி அவர்கள் அனைவருக்கும் செல்வி சதீனா அவர்களின் பிறந்த நாள் கேக் வழங்கப்பட்டது.
இவ்வாறு சுவிஸ் வாழ் செல்வி சதீனா சுபாஸ்ரன் அவர்களது பிறந்த நாள் நிகழ்வானது தாயக கிராமத்தில் வெகு சிறப்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக செல்வி.சதீனா சுபாஷ்கரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிதம்பரபுரம் கற்குளம் கிராமத்தில் வாழும் தாயக உறவுகளுக்கான விசேட அசைவ உணவுடனான மதிய போசனத்துடன், செல்வி.சதீனா அவர்களின் பிறந்தநாள் சிறப்பாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வா. சதீனா அவர்கள், சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாணப் பெருமானான முருகப் பெருமானின் ஆசீர்வாதத்துடன் மென்மேலும் பல சகல கலைகளையும் பெற்று நீடூழி வாழ்வதுடன், புலம்பெயர் வாழ் இளம்தலைமுறைகள் இதுபோன்ற நிதிப் பங்களிப்பு மூலம் செய்யும் உதவிகளை தாயக உறவுகள் வரவேற்பதுடன்,
பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வி. சதீனா அவர்களுக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் நிதிப் பங்களிப்பு வழங்கிய அவருக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
23.12.2021
சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.தாயகத்து மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள் (வீடியோ)
சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன் கொண்டாடப்பட்டது.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1