;
Athirady Tamil News

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

0

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)
######################################

யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர். திருமதி. கலையரசி பாலகோபாலன் அவர்களின் முதலாமாண்டு திதி எதிர்வரும் 25.12.2021 அன்றாகும் அதனை முன்னிட்டு அன்னாரின் நினைவாக அமரர் திருமதி கலையரசி பாலகோபாலன் அவர்களது சகோதரியான கனடாவில் வதியும் திருமதி.கவிதா இந்திரன் குடும்பத்தால் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில்.. வவுனியா நெளுக்குளம் பாலாமைக்கல் எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெற்றோர் இல்லாத மாணவ மாணவிகளில் ஒரு தொகையினருக்கு, அடுத்த வருடத்துக்கான தேவையான முழுமையான “கற்றல் உபகரணங்கள்” அடங்கிய பொதி வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் கலையரசி பாலகோபாலன் அவர்களது ஆத்மசாந்தி நிகழ்வு பாலாமைக்கல் பொது நோக்கு மண்டபத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டு பாலாமைக்கல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதம குருக்களான பிரம்மஸ்ரீ கிரிதரசர்மா அவர்களால் ஆத்மசாந்தி தீபமேற்றி ஆரம்பித்து வைக்க மாணவ மாணவிகளால் தேவாரபாராயணம் இசைக்கப்பட்டு ஆத்மசாந்திக்காக ஒரு நிமிடம் மௌன வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பிரதம குருக்களினால் நினைவுரையாற்றப்பட்து

அதனைத் தொடர்ந்து அமரர் கலையரசி கோபாலன் அவர்களது நினைவாக அவரது சகோதரியான கனடாவில் வசிக்கும் திருமதி கவிதா இந்திரன் தம்பதிகளால் வழங்கப்பட்ட அடுத்த வருடத்திற்று தேவையான முழுமையான கற்றலுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனை ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ கிரிதரசர்மா அவர்கள் தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு வழங்கி வைக்க ஸ்ரீ முத்துமாரி முன்பள்ளி ஆசிரியை திருமதி சிவரஞ்சினி பொது அமைப்புக்களின் பிரதிநிதி திரு சுமன். திருமதி ராதிகா கிரிதரசர்மா மற்றும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகசபை உறுப்பினர்களான திருமதி பவளராணி, திரு சஞ்சீவன் ஆகியோர் தேந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.அத்துடன் ஏனைய மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அறநெறி ஆசிரியை ஊடாகவே மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். நிதி வழங்குனர்களின் வேண்டுகோளின்படி மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து மாணவர்கள் தேர்ந்தெடுத்து இவ்வுதவியை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஒழுங்கமைத்திருந்து.

எனவே இதற்கான நிதிப்பங்களிப்பினை தந்துதவிய கனடாவில் வசிக்கும் திருமதி கவிதா இந்திரன் அவர்களுக்கு தாயக உறவுகளின் சார்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன் அமரத்துவமடைந்த கலையரசி பாலகோபாலன் அன்னையின் ஆத்மா சாந்திபெற எல்லாம்வல்ல இறையருளை வேண்டிக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

இதனைக் தொடர்ந்து அன்னையின் நினைவாக இன்று 25.12.2021 சனிக்கிழமையன்று மதியம் வவுனியா பழைய கற்குளம் ஸ்ரீ விஸ்ணு ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பூசையும் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

25.12.2021

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.