சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (படங்கள், வீடியோ)
#####################################
யாழ். குப்பிளான் மற்றும் புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சொலத்தூண் மாநிலத்தில் வசிப்பவருமான திரு.திருமதி ஜெகதீஸ்வரன் நாதரூபி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், ஜெரு அன்றில் விது என அழைக்கப்படும் “ஜெரு” றெஸ்ரூரென்ட் உரிமையாளருமான செல்வன் விதுஷன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பெற்றோரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா கற்குளம் 04 கிராமத்தில் கணவரால் கைவிடப்பட்டு இரண்டு பிள்ளையோடு வசிக்கும் திருமதி கணேசன் மேனகாதேவி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக நல்லின சினைப் பசு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் கிராமத்தில் கணவரில்லாத நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் மிகவும் வறிய நிலையில் வசிக்கும் திருமதி ரவிச்சந்திரன் மேனகாதேவி என்ற குடும்பத் தலைவி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவடட இணைப்பாளரான, சிதம்பரபுரத்தில் வசிக்கும் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்களோடு தொடர்பு கொண்டு தனது குடும்பத்தின் வறுமை நிலையினை கூறி உதவி கேட்டு உதவிக்கான விண்ணப்பத்தினையும் கொடுத்திருந்தார். அவரின் உதவி குரல் மன்றத்தின் முகாமைத்துவக் குழு பரிசீலித்து அவர் கேட்டுக் கொண்ட வாழ்வாவாதார உதவியான நல்லின சினைப் பசுவினை வழங்க அனுமதி வழங்கியது.
திருமதி மேனகாதேவி குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியான நல்லின பசுவினை அண்மையில் சுவிசிஸ் பிறந்தநாளைக் கொண்டாடும் திரு திருமதி ஜெகதீஸ்வரன் நாதரூபி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், ஜெரு றெஸ்ரோரென்ட் உரிமையாளருமான செல்வன் விதுஷன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர்களின் நிதிப்பங்களிப்பில் நல்லின சினைப்பட்டிருந்த பசு இன்று வழங்கப்பட்டது.
இவ்வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் பெண்ணுரிமை செயற்பாட்டாளரும், சமுர்த்தி உத்தியோகத்தருமான திருமதி மகேஸ்வரி அவர்களின் பிரதிநிதியாக சமுர்த்தி சங்கத்தின் தலைவியான திருமதி லலிதா சூரியகுமார் அவர்கள் கலந்து கொண்டு குறித்த வாழ்வாதார உதவியினை வழங்கி வைத்தார். அத்துடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவரான திருமதி.நவரத்தினம் பவளராணி அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன், பயனாளிகளுடன் இணைந்து அவ்வூர் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி யாழ். குப்பிளான் மற்றும் புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்த தம்பதிகளான திரு.திருமதி ஜெகதீஸ்வரன் நாதரூபி ஆகியோர் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக ஏற்கனவே கோழிக்கூடும், கோழிகளும், உலருணவுப் பொதிகள் என பல்வேறு “வாழ்வாதார உதவிகள்” வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் காணும் செல்வன்.விதுஷன் அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தாயக உறவுகளோடு இணைந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், வாழ்வாதார உதவி தொடர்பான அனைத்து நிதிப்பங்களிப்பு செய்தமைக்காக அவரது பெற்றோர்களுக்கும், தாயக சொந்தங்கள் சார்பாக நன்றியினையும், வாழ்த்துக்களையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
01.01.2022
சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்த நாளில் பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1