;
Athirady Tamil News

தளபதி மாணிக்கதாசன் “ஜனன தினத்தை” முன்னிட்டு சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.. (படங்கள்)

0

தளபதி மாணிக்கதாசன் “ஜனன தினத்தை” முன்னிட்டு சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.. (படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களின் “ஜனன தினத்தை” முன்னிட்டு சுவிஸ் புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் சில வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள உள்ளோம். அதில் ஒருவரான புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு.செல்லத்துரை தவராசா (தோழர். தேவண்ணர் -கிளாரூஷ்) கடந்த மாதம் தாயகம் சென்று இருந்த போது, அங்கு நாம் குறிப்பிடும் இடத்தில் நாம் குறிப்பிடும் பயனாளிக்கு, நாம் குறிப்பிடும் விருந்தினர் ஊடாக “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக விரும்பிய வாழ்வாதார உதவியை வழங்கி வைப்பதாக உறுதி அளித்து இருந்தார்.

அந்த வகையில் கடந்தமாதம் தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்று இருந்த புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு.தேவண்ணர் (கிளாரூஷ்) அவர்களின் நிதிப் பங்களிப்பில், யாழ் நிலாவரைக் கிணறு இருக்கும் நவற்கிரியிலிருந்து, மிகவும் சிரமத்துக்கு மத்தியில் யாழ்.புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரிக்கு சென்று தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி செல்வி.கீர்த்தனா சிவகரன் அவர்களுக்கு, “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிகழ்வின் அடிப்படையில், துவிச்சக்கர வண்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கி இருந்தார். மேற்படி மாணவி செல்வி.கீர்த்தனா சிவகரன் அவர்களின் தந்தையாரான திரு.சிவகரன் மிதிவெடியில் சிக்கி ஒரு காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பலாலி மத்தியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி சிறுப்பிட்டி மத்தியில் இலங்கைவங்கி வீதியை வதிவிடமாகவும் கொண்ட, கைம்பெண்ணான திருமதி.சித்திரவேல் வெள்ளையம்மா அவர்களின் மகளும், நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில், தரம் எட்டில் கல்வி பயிலும் செல்வி.கரன்சிகா சித்திரவேல் எனும் மாணவியின் கல்வி முயற்சிக்காக இருபத்தையாயிரம் ரூபாயை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

அதேபோல் யாழ்.வடமூலை வசாவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்.சுன்னாகம் பழைய பொலீஸ் நிலைய வீதியை தற்போது வதிவிடமாகவும் கொண்ட, திருமதி.ஜோன்பிள்ளை சின்னமலர் குடும்பத்தினருக்கு, அதாவது திருமதி.ஜோன்பிள்ளை சின்னமலர் (வயது 77 -கைம்பெண்), அவரது மகளான திருமதி.ஜெயசீலன் ஜெஸ்மின் ஜெயரோஸ் (வயது 50 -கைம்பெண்), செல்வி.மேரிஜெரின் ஜெயசீலன் (வயது 16-இருதய நோயாளி), ஆகியோருக்கு இருபத்தையாயிரம் ரூபா நிதி உதவியும் வழங்கி இருந்தார்.

இதன் தொடர்ச்ச்சியாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், புளொட் அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான திரு.பா.கஜதீபன் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அதனடிப்படையில் சபாபதி லேன் தலையாளியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் வசந்தராணி என்பவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி வாழ்வாதார உதவிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிகழ்வில், “மாணிக்கதாசன் பவுண்டேஷனின் தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் திரு.சுவிஸ்ரஞ்சன்” அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறப்பு விருந்தினராக புளொட் அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ பா.கஜதீபன் அவர்கள் கலந்து கொண்டு மேற்படி உதவியினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நிதிப்பங்களிப்பு வழங்கிய புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. தேவண்ணர் (கிளாரூஷ்), புளொட் அமைப்பின் பிரதிநிதியும், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான திரு. ஞா.கிஷோர் ஆகியோருடன் பயனாளிகளும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில் எமது வேண்டுகோளை ஏற்று கலந்து சிறப்பித்த கௌரவ திரு.பா.கஜதீபன், திரு. ஞா.கிஷோர் ஆகியோருக்கும், நிதிப் பங்களிப்பு வழங்கிய புளொட் சுவிஸ் கிளை உறுப்பினர் திரு. தேவண்ணர் (கிளாரூஷ்) அவர்களுக்கும் பயனாளிகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அமரர்.மாணிக்கதாசன் அவர்களின் “ஜனன தினத்தில்” அவரது ஆத்மா சாந்தியடைய தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிக்கிறது.

இதேவேளை நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், வகைதொகையின்றி கொரோனா தொற்றும் கிராமங்கள் தனிமைப்படுத்தல் மத்தியில், தொழில் வாய்ப்பின்றி செய்வதறியாத நிலையில் வாழும் சூழ்நிலையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் எதிர்வரும் பதின்நான்காம் திகதி வருகிறது.

இதனை முன்னிட்டு புளொட் இயக்கத்தின் உப தலைவரும், அதன் இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளான தை பதினான்காம் திகதியை “மாணிக்கப் பொங்கல் நாளாக” கொண்டாடும் முகமாக,

இன மத வேறுபாடில்லாமல் பொங்கல் நிகழ்வைக் கொண்டாட “பொங்கலுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும்” அடங்கிய பொதியினை, புளொட் சுவிஸ் தோழர்கள் சிலரின் நிதிப் பங்களிப்பில் வழங்க உள்ளது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.

புலம்பெயர் வாழும் புளொட் இயக்கத்தின் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் பொங்கல் பொதிகள் வழங்கப்பட உள்ளது. எமது “கல்விக்கு கரம் கொடுப்போம், மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்” திட்டமானது, புளொட் உபதலைவர் அமரர் மாணிக்கதாசனின் ஜனனதினமான ஜனவரி 14 முதல், புளொட் செயலதிபர் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதினம் (பிப்ரவரி 18) வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

10.01.2022

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.. (படங்கள்)

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர் வாழ்வாதார உதவி.. (படங்கள்)

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர் வாழ்வாதார உதவி.. (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.